Onetamil News Logo

 ஓபிசி பிரிவையும் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் - என்று ஓபிசி/டி.என்.டி சமூகங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Onetamil News
 

ஓபிசி பிரிவையும் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் - என்று ஓபிசி/டி.என்.டி சமூகங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 12 ;  ஓபிசி பிரிவையும் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் - என்று ஓபிசி/டி.என்.டி சமூகங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 1931ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தால் வி.பி.சிங் அரசு ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தது. அரசுத்துறை இட ஒதுக்கீட்டில் போதிய பிரதிநிதத்துவம் கிடைக்க ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை புதிதாக எடுக்கும்படி பல அமைப்பினர் வற்புறுத்தி வருகின்றனர். 
வருகின்ற 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி -எஸ்டி காலத்துடன் ஓபிசி என்ற காலத்தையும் சேர்த்து ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பை கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும் எனவும், 70 ஆண்டுகளாக ஓபிசி மக்கள்தொகை எடுக்கப்படாமல் அவர்களது உரிமை மறுக்கப்படுவது குறித்து எடுத்துக் கூறியும், 27 சதவீத இட ஒதுக்கீடு என்று கூறிவிட்டு 15% இட ஒதுக்கீடு மட்டும் தான் ஒபிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது எனவே அதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஓபிசி  ஒருங்கிணைப்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர்  கார்த்திக் ராஜன்  தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo