Onetamil News Logo

பதுக்கி வைத்திருந்த 1 ¼ டன் எடையுள்ள ரூபாய் 17 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது ;தூத்துக்குடியில் பரபரப்பு 

Onetamil News
 

பதுக்கி வைத்திருந்த 1 ¼ டன் எடையுள்ள ரூபாய் 17 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது ;தூத்துக்குடியில் பரபரப்பு 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 ¼ டன் எடையுள்ள ரூபாய் 17 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது கைது செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
போதைப் பொருள் பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட எஸ்.பி  எஸ். ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து, மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மேற்படி தீவிர நடவடிக்கையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது அதிக அளவில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் தூத்துக்குடியில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள், உதவி ஆய்வாளர் சிவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சிவசங்கர், காவலர்கள் திரு.சரவணக்குமார் மற்றும் முத்துக்குமாரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணி செவன்த்டே பள்ளி  அருகே  வாகன  சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
 அப்போது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பிருத்திவிராஜ் (வயது 22) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் (TN69 BJ 8158 Yamaha Ray) இரண்டு வெள்ளை சாக்கு  மூட்டையுடன் வந்தார். அந்த மூட்டைகளை சோதனை செய்ததில், அதில் சுமார் 2600 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 மேலும் அவரை துருவி, துருவி விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் மகாராஜன் (வயது 36) என்பவருடனும், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சோலையப்பன் (வயது 33)  என்பவருடனும் கூட்டு சேர்ந்து 3 கார் மற்றும்  ஒரு லாரியை பயன்படுத்தி (I.10 Car TN 09  BT 8461,  Maruthi Omni car TN69 BC 0020, ECCO Maruthi Van TN69 BJ 0136 மற்றும் TATA ULTRA LORRY TN41 AR 9481) வடமாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி லாப நோக்குடன் விற்பனை செய்து வந்ததும், அதிகமாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்பனை செய்து  வந்தும் விசாரணையில் தெரியவந்தது.
ஆகவே மேற்படி தனிப்படையினர் மூன்று எதிரிகளையும் கைது செய்து, மகராஜன் என்பவருடைய வீட்டிற்கு எதிரில் உள்ள, அவரது வாடகை வீட்டில் பதுக்கில் வைத்திருந்த  1¼ டன் எடையுள்ள பத்துவகையான புகையிலை பொருட்கள் மொத்தம் 2,44,958 பாக்கெட்டுகள் கைப்பற்றி, எதிரிகள் பிருத்திவிராஜ் (வயது 22)  மகாராஜன் (வயது 36) மற்றும் சோலையப்பன் (வயது 33) ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய ஒரு இரு சக்கர வாகனம், 3 கார்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட 1 ¼ டன் எடையுள்ள புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 17,17,376/-ஆகும்.
இதை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த வடபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் அனைவரையும் பாராட்டினார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கஞ்சா போன்றை போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளாகள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பலர் கைது செய்யப்பட்டு, அதிக அளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அவர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்திலும் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo