Onetamil News Logo

தூத்துக்குடி அருகே முறப்பநாட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை ;பரபரப்பு தகவல்கள் 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே முறப்பநாட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை ;பரபரப்பு தகவல்கள் 


 தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 11 ;தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட முறப்பநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட சென்னல்பட்டியில் இன்று காலை வீட்டில் இருந்த வழக்கறிஞர் வேல்முருகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னல்பட்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் இவரது மகன் வேல்முருகன் (27). வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும், இவரது உறவினர் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சண்முகவேல் மகன் செல்வம் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இன்று காலை சுமார் 9.30 மணியளவில் செல்வம், வேல்முருகனிடம் நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு செய்ததாகவும் தகராறு முற்றவே கோபமான செல்வம், வேல்முருகனை அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தூத்துக்குடி அருகே முறப்பநாட்டில் நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo