Onetamil News Logo

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் பனைவிதை நடும் பணியை நபார்டுவங்கி பொது மேலாளர் கே.விஜயபாண்டியன் தொடங்கி வைத்தார்.

Onetamil News
 

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் பனைவிதை நடும் பணியை நபார்டு வங்கி பொது மேலாளர் கே.விஜயபாண்டியன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; மதர் சமூக சேவை நிறவனம் சார்பில்ஓரே நாளில் 5 ஆயிரம் பனைவிதை நடும் பணியை தேசிய வேளான்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) பொது மேலாளர் கே. விஜயபாண்டியன் தொடங்கி வைத்தார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துஉப்பு நீராக மாறி வருகிறது. நிலத்தடி நீரை  மேம்படுத்தவும; சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கை சீற்றங்களான புயல் சூறாவளி மண்அரிப்பு போன்றவற்றை பனைமரம் தடுத்து வருகிறது.அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பனைமரங்களை அதிகளவில் நட வேண்டும் என்ற நோக்கத்தோடு மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனைமரவிதை விதைக்க திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரியின் ஆலோசனைப்படி ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படும் பகுதியான உடன்குடி, சாத்தான்குளம், ஓட்டபிடாரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 பஞ்சாயத்துகளில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அதிகளவு பனைமரங்களை நடவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையின்  உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்காட்சி, விஜயநாராயணபுரம், வீரராகுவபுரம், அம்மன்புரம், நைனார்பத்து, பிச்சிவிளை, மறவன்மடம்இ நா.முத்தையாபுரம் பகுதிகளில் சாலைஓரங்களிலும,; குளக்கரைகளிலும,; வாய்க்கால் ஓரங்களிலும;  அரசு புறம்போக்கு இடத்திலும்,அனுமதி பெற்ற தனியார் இடத்திலும் பனைமரவிதை நடும் பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை  மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ்.ஜே. கென்னடி வரவேற்றார்.  உடன்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பானு,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் ஆகியோர் தலைமைதாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் டி. கண்னன்,  மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகம் மதுரை கோட்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் உதவி இயக்குனர் ராஜீவ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தேசிய வேளான்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) பொது மேலாளர் கே. விஜயபாண்டியன் கலந்து கொண்டு ஒரே நாளில் 5 ஆயிரம் பனைமர விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்டகே.வி.ஐ.சி. ஒருங்கினைப்பாளர் எஸ்.செந்தில்குமார்  சீர்காட்சி ஊராட்சி மன்ற செயலாளர் அந்தோணிஜார்ஜ்,  பணிதள பொறுப்பாளர் வளர்மதி, மதர் சமூக சேவை நிறுவன திட்ட அதிகாரி டி.ஆர்.சந்திரன், லீடு டிரஸ்ட் இயக்குனர் எஸ். பானுமதி,பயிற்றுநர் அமராவதி, கணக்காளர் கரோலீன்  மதர் மகளிர்சுயஉதவிகுழு பெண்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனைமரவிதைகளை விதைத்தனர்.  முடிவில் ஒருங்கினைப்பாளர் ஜே.எஸ்.செல்வகுமார் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo