Onetamil News Logo

தூத்துக்குடியில் பாலியல் புகாரில் சிக்கிய  மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவத்துறைக்கு மாற்றம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் பாலியல் புகாரில் சிக்கிய  மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவத்துறைக்கு மாற்றம் 


தூத்துக்குடி 2019 ஜூன் 20 ;தூத்துக்குடியில் பாலியல் புகாரில் சிக்கிய  மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ஒரு டாக்டர் கந்தசாமி மீது, அந்த துறையில் பணியாற்றி வந்த சில பெண் பயிற்சி டாக்டர்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள், தங்களிடம் அந்த டாக்டர் பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாக கல்லூரி டீனுக்கு பெயர் குறிப்பிடாமல் புகார் கடிதம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், டாக்டர் லலிதா தலைமையில் 3 பேர் குழுவினர் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அறிக்கையை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த உதவி பேராசிரியர் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
 அவர் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இனிமேல் அவர் பேராசிரியராக பணியாற்ற முடியாது’ என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo