Onetamil News Logo

மாணவர்களுக்காக வாழ்ந்த மனித கடவுள் பேரா.சா.செல்வராஜ் மறைந்தார் ;தூத்துக்குடி தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் உருக்கம் 

Onetamil News
 

மாணவர்களுக்காக வாழ்ந்த மனித கடவுள் பேரா.சா.செல்வராஜ் மறைந்தார் ;தூத்துக்குடி தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் உருக்கம் 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 1: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் சா.செல்வராஜ் 2020 ஜூலை 31ம் தேதி நள்ளிரவு  திடீர் நெஞ்சு வலியால் தூத்துக்குடியில் மறைந்தார்.இவர் சுமார் 25 ஆண்டுகள் கல்லூரி முதல்வராகவே பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரிடம் படித்த மாணவர்கள் தமிழகத்தின் பல இடங்களில்,இந்தியாவின் பல இடங்களில், உலகமெங்கும் பல நாடுகளில் பணியாற்றிவருகின்றார்கள். 
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் கூறியதாவது....    எல்லோருக்கும் பள்ளிக்காலத்திலும், கல்லூரி காலத்திலும் தங்களுக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எனக்கும் என்னுடைய கல்லூரி காலத்தில் கல்லூரி முதல்வரும், பேராசிரியருமான செல்வராஜ்  மிகவும் பிடித்தமான ஒரு பேராசிரியர். இன்றைக்கும் நினைவில் இருந்து நீங்காத ஒரு பேராசிரியரும் கூட. 
மிகவும் கடினமான பாடங்களைக்கூட அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக அவர் வகுப்பு எடுக்கிற விதமே தனி அழகு தான். எனக்குத் தெரிந்து  அவர் யாரையும் மிகவும் கோபமாக திட்டியது கூட கிடையாது. அந்த அளவிற்கு அவர் எல்லாவற்றையும் எங்களின் அடாவடியாக இருந்த அனைத்தையும் சுலபமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக எங்களுக்கு புரிகிற மாதிரி அறிவுரை வழங்குவார். எங்களிடம் ஒரு ஆசிரியர் போல் பழகாமல், ஒரு தோழனைப் போல் பழகுவது தான் அவருடைய தனிச் சிறப்பு. 
அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த இரண்டு விஷயங்களே போதுமானது அவர் எப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்கு.அவர் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் அவரால் உருவாக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் .,அதிகாரிகள் ஏராளம்,அவரால் அடையாளம் காணப்பட்டவரில் நானும்,ஒருவர்,அய்யாவுடன் இருந்த காலங்கள் அனைத்தும்,வசந்த காலங்கள்..இப்படி ஒரு முதல்வரை நாங்கள் பார்க்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு முகவரியே இல்லாமல் போய் இருக்கும்,அந்தக்காலத்தில் 1976 -1979 காலகட்டங்களில் மாணவர் செயலர் என்கின்ற முறையிலே அடாவடியாக இருந்த எங்களை மனிதனாக மாற்றிய மாமனிதன் அவர். வசதியில்லாத மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கட்டி படிக்க வைத்தவர்.உலகத்திலேயே மாணவர்களை பிள்ளைகளாக கருதியவர் இவர் ஒருவரே.அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.  மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி ஊழியர்கள் ,அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo