Onetamil News Logo

வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டவர்கள்  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை இன்று நண்பகல் முற்றுகை ;ரூ. 40 ஆக இருந்த வாடகை வரும் 1 ம் தேதி முதல் ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதாக தகவல் கேட்டு போராட்டம்  

Onetamil News
 

வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டவர்கள்  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை இன்று நண்பகல் முற்றுகை ;ரூ. 40 ஆக இருந்த வாடகை வரும் 1 ம் தேதி முதல் ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதாக தகவல் கேட்டு போராட்டம்  


தூத்துக்குடி 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை ;தூத்துக்குடி அந்தோனியார் கோவில் அருகில் இருக்கும் வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வியாபாரிகள் ஆகியோர்  மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு இன்று ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி இடத்தில் ,அந்தோனியார் கோவில் அருகில்  வ.உ.சி. மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்குள்ள கடைகளை நம்பி சுமார் 8 ஆயிரதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மார்க்கெட்டை நம்பி இருக்கின்றன.வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மார்க்கெட்டை நிர்வகித்து வந்தது.  வியாபாரிகள் சங்கம் வாடகை பணத்தை வசூல் செய்து மாநகராட்சிக்கு செலுத்தி வந்தது. தினம் ரூ. 40 ஆக இருந்த வாடகை  வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு செய்து அதற்கான அறிவிப்பு பலகையை மாநகராட்சி அலுவலர்கள் வைக்க வந்துள்ளனர். 
இந்த நிலையில் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டவர்கள்  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை இன்று நண்பகல் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வியாபாரிகள் சங்க பொருளாளர் அன்புராஜ், முன்னாள் எம்எல்ஏ., சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து  பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மாநகராட்சி அலுவலகம் முன்பு டிஎஸ்பி கணேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo