Onetamil News Logo

டாக்டர் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய தூத்துக்குடி இன்ஜினியர் மாப்பிள்ளை ;நீதியை நிலைநாட்ட எஸ்.பி.நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

Onetamil News
 

டாக்டர் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய தூத்துக்குடி இன்ஜினியர் மாப்பிள்ளை ;நீதியை நிலைநாட்ட எஸ்.பி.நடவடிக்கை எடுக்க கோரிக்கை 


தூத்துக்குடி 2019 நவம்பர் 10 ; மருத்துவர் .வெ.ரேவதி (31) .,த/பெ வெள்ளையப்பன்.,எண்.145/144 மேலத்தெரு,சுந்தரராஜபுரம், இராஜபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம். இவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அவர்களுக்கு அளித்துள்ள புகார் கடிதம் பின்வருமாறு ;
ரேவதியாகிய நான் MBBS பொது மருத்துவம் படித்த பட்டாதாரி தற்போது சென்னை தாம்பரத்தில் செயல்பட்டு வரும் Smile foundedion ,என்கிற தொண்டு நிறுவனத்தில் Mobile Hospital மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். சென்னை எழும்பூர் Arcot Iutheran Church,women 's Christian Hostel ,
73, E.V.K Sampath Road Vepery , Chennai - 07 என்கிற முகவரியில் தற்போது குடியிருந்து வருகிறேன்.
எனது பெற்றோர் எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்தனர் கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் நான் Bharath matrimoni இல் பதிவு செய்திருந்தேன். அதன் மூலம் சென்னை கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா நகர் முதல் தெருவில் குடியிருந்து வரும் தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம், AM பட்டியை பூர்வீகமாகக் கொண்ட மாடசாமி என்பவரின் மகன் சண்முகராஜ்  என்பவர் தன்னை M.E.M.S பட்டாதாரி என்றும், தற்போது அயர்லாந்தில் Dublin என்ற இடத்தில் பணிபுரிவதாகவும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் இருவரும் சுயவிவரங்களை பகிர்ந்து கொண்டோம்.
சண்முகராஜிக்கு என்னை பிடித்துப் போனதால் அவரின் குடும்பத்தாருடன் 13.11.2017 ஆம் நாளன்று முறைப்படி எனது வீட்டிற்கு வந்து எனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் பெண் கேட்டனர்.
இரு வீட்டாரும் கலந்து பேசி  22.01.2019 ஆம் நாளன்று நிச்சயதார்த்தம் நடத்துவதென முடிவெடுத்தனர்.
முடிவெடுத்தபடி நிச்சயதார்த்தம் நடந்தது 10.02.2019 அன்று திருமண நாள் குறிக்கப்பட்டது. அதனப்படையில் திருமணப் பத்திரிக்கை அச்சடித்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து எனது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
எனது பெற்றோரிடம் மாப்பிள்ளை வீட்டார் திருமண வரதட்சனையாக 50 பவுன் நகையும் , 15 லட்ச ரூபாயும் கேட்டிருந்தனர். எனது பெற்றோர் எங்களால் முடிந்த அளவு செய்கிறோம் என்று சொல்லிவிட்டனர்.
இதற்கிடையில் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்த சூழலில் சண்முகராஜின் தந்தை மாடசாமியும், தாய் கலாவதியும், தங்கைகள் வளர்மதி, அறிவுமதியும் எனது பெற்றோரிடம் 100 பவுன் நகையும் 30 லட்ச ரூபாய் ரொக்கமும், ஒரு காரும் தந்தால் தான் என் மகன் ரேவதி கழுத்தில் தாலி கட்டுவான் இல்லை என்றால்
வேறு பெண் தயாராக இருக்கிறாள். உடனடியாக திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டத் தொடங்கி விட்டனர்.
இந்தச் சூழலில்  தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் AM பட்டியைச் சேர்ந்த பட்டாணி என்பவர் மகள் அழகு மாரிக்கும் சண்முகராஜிக்கும் ரகசியமாக பேசி முடிக்கப்பட்டு திருமணம் நடக்கவிருப்பதாக அறிந்தோம். 
எனது பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தி எனது மகள் வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள் என்று 
எவ்வளவோ கெஞ்சியும் சண்முகராஜின் வீட்டார் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இதனால் மனமுடைந்து சண்முகராஜின் பெற்றோர் காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சினேன். அவர்கள் மனம் மாறவே இல்லை.திருமணம் நின்று விடுமோ என்கிற அச்சத்தில் நான்  உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றேன் பெற்றோர் காப்பாற்றி விட்டனர். 
கடந்த 06.11.2019 இரவில் திருச்செந்தூர் டெம்பிள் காவல் நிலையத்திலிருந்து சண்முகராஜ் தரப்பினர் 10.11.2019 அன்று சண்முகராஜிக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், அத் திருமணத்தை நான் தடுப்பதற்கு முயற்சிப்பதாகவும், அதனால் காவல்துறை தகுந்த பாதுகாப்பளிக் வேண்டும் என புகார் மனு அளித்திருப்பதாகவும் செல்போனில் தகவல் சொல்லி நேரில் வந்து விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றனர். 
நான் எனது தந்தை மற்றும் ஊர்க்காரர்களுடன் புறப்பட்டு 07.11.2019 அன்று இரவு 8 மணியளவில் திருச்செந்தூர் டெம்பிள் காவல் நிலையத்தில்  விசாரணைக்கு ஆஜரானேன். 
ஆய்வாளர் அவர்கள் எனது தரப்பு நியாயத்தை கேட்காமலும், நான் சமர்பித்த சான்றாவணங்களை பார்வையிடாமலும் முறையாக விசாரிக்காமலும் ஒரு தலைபட்சமாக சண்முகராஜிக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் மனமுடைந்த நான் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் 26 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன் இதனை அறிந்து கொண்ட எனது உறவினர்கள் என்னை மீட்டு இரவு 10.30 மணியளவில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விட்டனர் AR. No 1912668. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமணைக்கு அனுப்பி வைத்தனர்09.11.2019 இன்று மதியம் டிசார்ஜ் செய்தனர்.
என்னை திருமண ஆசைகாட்டி என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, கூடுதலாக வரதட்சணை கேட்டு நிச்சயிக்கப்பட்டு நாள் குறிக்கப்பட்ட எனது திருமணத்தை ரத்து செய்து உடலியல் மற்றும் உளவிவியல் அடிப்படையில் என்னை சித்திரவதை செய்த சண்முகராஜ், சண்முகராஜின் தந்தை மாடசாமி, தாயார் கலாவதி, சண்முகராஜின் தங்கைகள் வளர்மதி,அறிவுமதி ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழும், பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும்  நடவடிக்கை எடுக்குமாறும். நாளை 10.11.2019 அன்று திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் நடைபெறவுள்ள சண்முகராஜ் அழகுமாரி திருமணத்தை தடுத்து எனக்கு நீதி வழங்குமாறு 
எங்கும் நீதி கிடைக்காததால் தங்களை நாடி வந்துள்ளேன். இங்கும் நீதி கிடைக்கவில்லை எனில் இனி இந்த அநீதியான உலகத்தில் வாழ்வதில் அர்த்தமில்லைதானே. நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையில். 
இப்படிக்கு ,வெ.ரேவதி MBBS .,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சான்றா வணங்கள் பின்னினைப்பு :
1. நிச்சயதார்த்த புகைப்படங்கள்
2 . திருமண பத்திரிக்கை
3 .வட்டாச்சியர் அளித்த முதல் திருமணம் என்பதற்கான சான்றிதழ்
4. 28.01_2019 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மகளிர் காவல் நிலையதில் அளித்த புகார் மனு நகல் .
5. 12.02.2019 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கை நகல் .
6 . விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனு
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo