Onetamil News Logo

மீன் தூளுக்கு 5% GST வரி விதித்த  அரசு  ; அகில இந்திய மீன்தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு தூத்துக்குடி மீனவர்கள் ஆதரவு   

Onetamil News
 

மீன் தூளுக்கு 5% GST வரி விதித்த  அரசு  ; அகில இந்திய மீன்தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு தூத்துக்குடி மீனவர்கள் ஆதரவு   


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 13 ; மீன் தூளுக்கு 5% GST வரி விதித்த  அரசு  ; அகில இந்திய மீன்தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு தூத்துக்குடி மீனவர்கள் ஆதரவு  தெரிவித்தனர். 
 தூத்துக்குடி மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மீன் ஏலமிடுவோர் மற்றும் மீன் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அந்தோனியப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது......தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர், தொழிலாளர்கள், மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக அகில இந்திய மீன்தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் நடைபெறும்  வேலை நிறுத்தத்திற்கு எங்களுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.
 மீன் அரவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மீன் தூளுக்கு 5% GST வரி விதித்து அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த 5% வரியை முன் தேதியிட்டு 01.07.2017 முதல் கட்ட வேண்டும் என்று சொல்லி மீன் தூள் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
 அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் மீன்தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத காரணத்தால் தொழிற்சாலைகளை தற்காலியமாக காலை வரையறையின்றி  மூடியுள்ளார்கள்.
ஆகவே மேற்படி GST விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீன்தூளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீதம் வரியில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக காப்பாற்ற தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம். 
என்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மீன் ஏலமிடுவோர் மற்றும் மீன் வியாபாரிகள் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து தமிழக அரசுக்கு தங்களது கண்டனத்தையும் கோரிக்கைகளையும்  தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo