Onetamil News Logo

தூத்துக்குடியில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு

Onetamil News
 

தூத்துக்குடியில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் எதிரில் மோட்டார் பைக் மீது லாரி ஏறி இறங்கிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி 3 -வது மைல் அருகில் உள்ள கந்தன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் இவரது மகன் முத்துகுமார் (20). இவர் கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை  9 மணிக்கு பைக்கில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் ரோட்டில் மேற்கே நோக்கி இடது புறமாக திரும்பும் போது தூத்துக்குடியில் இருந்து தட்டபாறை நோக்கிச் சென்ற லாரி நிலைதடுமாறி பைக் மீது ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் முத்துக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் அண்ணாநகரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo