Onetamil News Logo

அம்மா வாகன மானியத் திட்டத்தில் விண்ணப்பித்தது 8,855 பேர் ; வாகனங்கள் வழங்க இலக்கு 2534 பேர்  ;கலெக்டர் அறிவிப்பு 

Onetamil News
 

அம்மா வாகன மானியத் திட்டத்தில் விண்ணப்பித்தது 8,855 பேர் ; வாகனங்கள் வழங்க இலக்கு 2534 பேர்  ;கலெக்டர் அறிவிப்பு 



தூத்துக்குடி பிப் 12 ;அம்மா வாகன மானியத் திட்டத்தில் விண்ணப்பித்தது 8,855 பேர் ; வாகனங்கள் வழங்க இலக்கு 2534 பேர்  ; தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.                                            
                                                                                                                              தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை  மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் கலெக்டர் வெங்கடேஷ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது...
குளங்களில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதனால், நமது மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை  என்று கூறினார்.தமிழகத்திலே முதல் முறையாக நமது  மாவட்டத்தில் 1060 விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.நமது மாவட்டத்தில் அம்மா வாகன திட்டத்தில் பயன்பெற 8,855பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் கிராமப் பகுதியில் 4,288 விண்ணப்பங்களும், நகர் பகுதியில் 4567 விண்ணப்பங்களும் வாங்கப்பட்டது . நமது மாவட்டத்தில் 2534பேருக்கு வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.என்று கூறினார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo