Onetamil News Logo

செம்மறி ஆடு வளர்ப்போர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

செம்மறி ஆடு வளர்ப்போர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மறி ஆடு வளர்ப்போர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவரது அறிவிப்பு; நீலநாக்கு நோய் செம்மறி ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் ஆகும். மழைக்காலத்திலும் அதன் தொடர்ச்சியாகவும் இந்நோய் செம்மறி ஆடுகளை அதிக அளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ் எனப்படும் நச்சுக்கிருமியால் கொசுக்கள் மூலம் பரவும் நோயாகும். 
நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் அதிக ஜுரத்துடன் சோர்வாக காணப்படும். மூக்கு மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக்கொண்டிருக்கும். நாக்கு சில சமயம் நீலநிறமாக மாறுவதுண்டு. கால்குளம்பின் மேல்பகுதி சிவந்து வலியுடன் இருக்கும். இதனால் ஆடுகள் நொண்டி நடக்கும். வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்நோய் கூலிக்காட்ஸ் எனும் ஒருவகை கொசுவினால் மட்டுமே பரவுகிறது.  மழைக்காலங்களில் கொசுவின் உற்பத்தி அதிகம் உள்ளதால் நோய் அதிகமாக பரவுகிறது. ஆடுகள் மழைக்கு இரவு நேரங்களில் மழை மற்றும் பனி தாக்குதல் இல்லாமல் மேடான கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். கொசுவை கட்டுப்படுத்தினால் மட்டுமே நீலநாக்கு நோயினை கட்டுப்படுத்த முடியும். ஆட்டுக்கொட்டிலை சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது. ஆட்டுக்கொட்டிலை சுற்றி உள்ள புதர்கள் அழிக்கப்படவேண்டும். கொசுக்கள் மாலை இருட்டும் நேரத்திலும் விடியற்காலை நேரத்திலும் வந்து ஆடுகளை கடிப்பதால் இந்நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் கொட்டிலில் அடைக்க வேண்டும். கொசுக்களை தவிர்க்க கொசுவர்த்திகள் மற்றும் புகைமூட்டம் வைக்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அரிசி அல்லது கம்பு கஞ்சி கொடுத்து கவனிப்பதன் மூலம் இறப்பை தவிர்க்கலாம். நோய் கண்ட ஆடுகளின் வாயிலுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். மேலும் அருகிலுள்ள கால்நடை மருத்துவரைக் கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். 
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் கயத்தார், ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் வட்டாரப்பகுதிகளில் நீலநாக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டில் நீலநாக்கு நோய் தாக்குதல் ஏற்படா வண்ணம் 179000 டோஸ்கள் தடுப்பூசி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடுகளுக்கு போடப்படவுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மறி ஆடு வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திடவும் தங்கள் பகுதி அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo