Onetamil News Logo

தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தொடங்கி வைத்தார். 

Onetamil News
 

தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தொடங்கி வைத்தார்.   


தூத்துக்குடி 2018 டிசம்பர் 7;தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் (நகரம்) சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தொடங்கி வைத்தார். 
தூத்துக்குடியில் மத்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்கம் (நகரம்) சிறப்பு விழிப்புணர்வு முகாமின் நிறைவு நாள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இன்று (07.12.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு வ.உ.சி. கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்கள். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
 தமிழ்நாடு முதலமைச்சர்  ஜனவரி 1 /2019 முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதை குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் முக்கிய திட்டமான தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்தும், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தூத்துக்குடி மாவட்டம் ஏற்கனவே 100 சதவீதம் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையே நீடிக்க பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்திய அளவில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்மேலும் தங்களது வீட்டின் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள்  தனியாக பிரித்து  துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கை கழுவும் பழக்கத்தினை சிறுவயதில் இருந்து கடைப்பிடிக்க வேண்டும். கை கழுவுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்றிட பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் கள விளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ்,  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு, தூத்துக்குடி இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.பரிதாசெரின், தூத்துக்குடி மாநகராட்சி மாநகர நல அலுவலர் மரு.வினோத்ராஜா, தூத்துக்குடி (மேற்கு மண்டலம்) சுகாதார அலுவலர் ஞா.ஸ்டாலின் பாக்கியநாதன், தூத்துக்குடி பெண்கள் ஆலோசனை குழுமம்  செயலாளர் ஜி.கிருஷ்ணவேணி கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo