தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி துறைமுகம் சார்பில் தூய்மை திட்டப்பணிகள் குறித்து உறுதிமொழி ஏறெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி 2018 செப் 29 ;தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இன்று தூய்மை இந்தியா திட்ட பணிகள் நடைபெற்றது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ‘தூய்மையே சேவை’ 15.09.2018 முதல் 02.10.2018 வரை அனுசரிக்கப்படுகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தூய்மையான பாரதத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ திட்டத்தை வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகதுணைதலைவர் நா. வையாபுரி, அன்று துறைமுக மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார்கள். இத்துவக்க விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக துணைதலைவர் நா. வையாபுரி, தூய்மையேசேவை உறுதிமொழியை முன்மொழிய துறைமுகத்தின் மூத்தஅதிகாரிகள்,ஊழியர்கள், துறைமுக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். மேலும் துறைமுக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மைக்கான விழிப்புணர்வுபிரதிபலிக்க கூடிய குறுந் நாடகங்கள் நடத்தப்பட்டன. துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் துறைமுக பள்ளிவளாகத்தில் தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகதுணை தலைவர் நா. வையாபுரி, , இவ்விழாவின் துவக்க உரையில் இந்த இயக்கத்தின் ஒருநோக்கமாக தூய்மையான பாரதம் உருவாவதற்கு துறைமுக அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் துறைமுக பள்ளி மாணவ மாணவிகள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழக துணைதலைவர் நா. வையாபுரி, தலைமையில் 17.09.2018 அன்று துறைமுக சுனாமி காலனி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.18.09.2018 இன்று தூய்மையின் சேவை அனுசரிப்பு முத்தையாபுரம் அருகிலுள்ள சூசைநகரில் நடத்தப்பட்டது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தூய்மையின் முக்கியத்தை வலியுறுத்தும் நகைச்சுவை நாடகங்கள் நடத்தப்பட்டன.மேலும் சூசைகாலனியை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் துறைமுகஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்; தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 15.09.2018 முதல் 02.10.2018 வரை அனுசரிக்கபடும் தூய்மையின் சேவைதிட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அவை தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேரணி,வீதிநாடகம்,துறைமுக கடற்கரை,சுனாமி காலனி, சூசைகாலனி மற்றும் முத்தையாபுரம் ஆகியபகுதிகளில் தூய்மைபடுத்துதவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு சுத்தத்தின் விழிப்புணர்வு பற்றிய பிரசுரங்கள்,துடப்பம்,குப்பை தொட்டிகள் மற்றும் கை உரை போன்றவை வழங்கப்படஉள்ளது.மேலும் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தூய்மைபற்றிய ஸ்லோகங்கள் கைபேசி குறுந்செய்திகளாக அனுப்பட்டு வருகிறது. மேலும் துறைமுக பள்ளி மாணவ மாணவிகள்,அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துறைமுக குடியிருப்பு பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டமானது இந்தியஅரசாங்கத்தின் வலியுறுத்தலின்படி15செப்டம்பர், 2018முதல் 02அக்டோபர் 2018வரை அனுசரிக்கப்படுகிறது. தூய்மைபாரத இயக்கம் துவங்கப்பட்டு நான்காவது ஆண்டாக தூய்மையின் சேவை பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் 15 செப்டம்பர்,2018 முதல் 02 அக்டோபர் 2018 வரை அனுசரிக்கப்படுகிறது.