Onetamil News Logo

தூத்துக்குடி கனநீர் ஆலை நிறுவனத்தில் டாக்டர். எஸ். சிவசைலம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

Onetamil News
 

தூத்துக்குடி கனநீர் ஆலை நிறுவனத்தில் டாக்டர். எஸ். சிவசைலம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.


தூத்துக்குடி, 2020 ஜனவரி 25 ;தூத்துக்குடியில் மத்திய அரசின் கனநீர் ஆலை நிறுவனம் (Heavy Water Plant, Tuticorin), இந்திய அணுசக்தி துறையின் கீழ் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
அதில் வருடந்தோறும் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வருட ஆரம்ப காலத்தில் பணி நிறைவு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இந்த நிலையில் பாதுகாப்பு மிகுந்த ஆலையினுள் நேற்று ஜனவரி 24ம் தேதி, வெள்ளியன்று நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு Healthy Aging (ஆரோக்கிய வாழ்வு) பற்றி டாக்டர். எஸ். சிவசைலம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தினார். பணி ஓய்வு பெறும் சுமார் 20 ஊழியர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இம்மாதிரியான பயிற்சி பயிலரங்குகளை கனநீர் ஆலையில் நடத்தி வருவதாக டாக்டர். எஸ். சிவசைலம் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கனநீர் ஆலை நிறுவனத்தின் மருத்துவர் டாக்டர். தமிழ் அரசி செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo