Onetamil News Logo

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர் தற்கொலை ; தற்கொலை முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என ஸ்டெர்லைட் நிர்வாகம் வேண்டுகோள்

Onetamil News
 

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர் தற்கொலை ; தற்கொலை முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என ஸ்டெர்லைட் நிர்வாகம் வேண்டுகோள் 


 தூத்துக்குடி 2019 ஜனவரி 14 ;இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் – ஸ்டெர்லைட் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படும் வேலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி திறக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தளவான்கோட்டை பகுதியை சார்ந்த சித்ரகுப்தபாண்டியன் மகன் தங்கதுஐர என்பவர் தற்கொலை செய்துள்ளார். இந்த துயர செய்தி ஜெயா தொலைகாட்சி செய்தி மூலம் நாங்கள் அறிந்தோம். இந்த துயர சம்பவத்திற்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். எனவே இளைஞர்கள் தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் இருக்கவேண்டும். இது போன்ற தற்கொலை முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo