Onetamil News Logo

ஸ்டெர்லைட்- யை திறக்க கோரி தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவர்கள் இன்று கோரிக்கை மனு வழங்கினர்.   

Onetamil News
 

ஸ்டெர்லைட்- யை திறக்க கோரி தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவர்கள் இன்று கோரிக்கை மனு வழங்கினர்.   


தூத்துக்குடி 2020 ஜூலை 14 ; மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் இன்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
 இது குறித்து தூத்துக்குடி அருகே  ராஜாவின்கோவில்  பஞ்சாயத்து தலைவர் அன்புராஜ் உள்பட பல  பஞ்சாயத்து தலைவர்கள்,சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது....
                                            எங்கள் பகுதிகளில் விவசாயம் பொய்த்து பலவருடங்கள் கடந்துவிட்டது.இந்த  நிலையில் எங்கள் கிராமத்து மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை  நம்பி உள்ளனர்.எங்கள் மக்கள் தொழிற்சாலைக்குச் சென்று வேலை செய்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும்.
 எங்கள் கிராம மக்கள்  நேரடியாகவும் , மற்றும் மறைமுகமாகவும் தொழில்களை செய்து வந்து அவர்களது  வாழ்வாதாரத்தை உயர்த்தி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எங்கள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் துக்க நிகழ்வுகளின் போது பல உதவிகளை குடும்பங்களின் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. குறிப்பாக இலவச மருத்துவமுகாம்,மரம் நடுதல்,குடிநீர் கிணறுகள் வெட்டிக்கொடுத்துள்ளனர்.கல்வி உதவித்தொகை,கோவில்  புனரமைப்பு பணிகள்,போன்றவற்றை செய்துவந்துள்ளனர். இந்த ஆலை மூடப்பட்டதால் நாங்கள் அன்றாடம் உணவிற்கே கஸ்டப்படும் நிலையில் உள்ளோம். தற்போது கொரோனா தொற்று நோய் பரவியதற்கு பிறகு முழுவதுமாக வேலையின்றி வாழ வழி தெரியாமல் தினமும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய காலங்களில் பல சமுதாய சேவைகள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டன.தற்போது எங்கள் கிராமம் போல பல கிராமங்கள் அந்த ஆலை திறந்தால் மட்டுமே வேலை வாய்ப்புகள் பெறும் நிலை உள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்த பல ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதாகவும்,ஆலையை மீண்டும் திறக்க  அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வில் சில்லாநத்தம் ஊராட்சி தலைவர்,புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி துணைத்தலைவர்,தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன்,உட்பட பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo