Onetamil News Logo

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் குடிநீர் கடந்த 13 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை ;பொதுமக்கள் சாலைமறியல் 

Onetamil News
 

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் குடிநீர் கடந்த 13 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை ;பொதுமக்கள் சாலைமறியல் 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 20 ;தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட10 வது வார்டு சுந்தரவேல் புரம், எழில் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் திரவியபுரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் சுந்தரவேல் புரம், எழில் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் குடிநீர் கடந்த 13 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்ட சுந்தரேசபுரம்சுந்தரவேல் புரம், 1வது தெரு முதல் 9வது தெரு வரையிலான பொதுமக்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் வட்ட கோவில்  சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் தூத்துக்குடி ராமேஸ்வரம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் வந்த பொதுமக்கள்  வேறு பாதைக்கு மாற்றி அனுப்பப்பட்டனர் வடபாகம்  காவல் நிலைய காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை சற்று ஓரமாக நிற்க வைத்தனர் மறியலில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்து உடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனே சரி செய்து குடிநீர் விநியோகம் செய்தால் மட்டுமே மறியலை கைவிட்டு கலைந்து செல்வோம் என மறியல் செய்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo