தூத்துக்குடியில் பசுபதி பாண்டியன் 9வது நினைவு தினம் ;அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவைத் தலைவர் எல்.கே.முருகன் தலைமையில் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி 2021 ஜனவரி 10 ;அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் L.K.முருகன் தலைமையில் பசுபதி பாண்டியன் 9-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பசுபதிபாண்டியன் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று நடந்தது. நினைவேந்தல் நிகழ்ச்சி அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அலங்காரதட்டில் உள்ள பசுபதி பாண்டியன் சமாதியுடன் கூடிய திடலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உலகின் முதல் தற்கொலை படை தளபதி ......அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர். L.K.முருகன் தலைமையில் வீரவணக்கம் செலுத்த சுமார் 200 இளைஞர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தெய்வேந்திரன் ,மாநில இளைஞர் அணி தலைவர் A.K.S.கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சின்ன மாரியப்பன், ..ஒட்டப் பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம்,வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மாடசாமி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர். J.P.பிரசாந்த் , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பெரிய மாரியப்பன்,மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டார் மாரியப்பன் , . தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் செந்தூர் பாண்டியன்,மாவட்ட விவசாய அணி செயலாளர் இலாட்சுமணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சில்லாங்குளம் கபில பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.