Onetamil News Logo

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 


தூத்துக்குடி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தலைமையில் நடைபெற்றது.  
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (10.01.2019) நடைபெற்றது.  
     இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்ததாவது:-
        இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜனவரி 25ம் தேதி அன்று தேசிய வாக்காளர் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தேவையான சக்கர நாற்காலி, சாய்வு தளம், தனிக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளதா என்பதை கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் ஆய்வு செய்து தேவைப்படும்பட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.  அதற்கு பின்பாகவும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட தேவையான விழிப்புணர்வு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.  தேர்தல் கல்வி குழுவினர் மூலம் பள்ளி மற்றும்  கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகளை நடத்தப்பட வேண்டும். தேசிய வாக்காளர் தினத்தன்று அனைத்து அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.  
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்  தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி பதாகைகளை பார்வையிட்டார். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா, கோவிந்தராசு, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo