Onetamil News Logo

தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில்,பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Onetamil News
 

தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில்,பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி


 

தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டஆட்சித்தலைவர் / சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையானவாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில், பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டஆட்சித்தலைவர் / சந்தீப் நந்தூரி,  தலைமையில்  இன்று (14.03.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:-  இந்தியதேர்தல் ஆணையம் நடைபெறஉள்ளதேர்தலில் எந்தஒருவாக்காளரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபடக்கூடாது எனவும், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் 11,000 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்தளவசதிகள், குடிநீர்,கழிப்பறை வசதிகள்,சக்கரநாற்காலி மற்றும் வாக்களிக்க ஏதுவாக தனியாக வரிசை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும்,பார்வையற்றவர்கள் வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி மூலம் வடிவமைக்கப்பட்ட வாக்குச்சீட்டு,பேலட் பேப்பர்,கையேடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.  வாக்களிப்பது உங்களின் கடமை மற்றும் ஜனநாயகஉரிமை என்பதால் நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்யவேண்டும் எனமாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர்  பேசினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள தேர்தலில்  வாக்குச்சாவடிமையமாக பயன்படுத்தவுள்ள சில்வர்புரத்தில் உள்ள தூத்துக்குடி நாசரேத் திருமண்டபம் அறக்கட்டளை நடுநிலைப்பள்ளியை மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர்  பார்வையிட்டார். 
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சிஆணையர் வீ.ப.ஜெயசீலன், ,உதவிஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, .,மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜெயசீலி, லூசியா சங்கம் இயக்குனர் அருட்பணி.கிராசிஸ் மைக்கேல், லூசியா தலைமைஆசிரியர் பெர்க்மான்ஸ்,தேர்தல்  களப்பணிஅலுவலர் அனிதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர் 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo