Onetamil News Logo

தூத்துக்குடி பொறியாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய சமூக ஆர்வலர் மீது  அவதூறு வழக்கு தொடர பொறியாளர்கள் முடிவு   

Onetamil News
 

தூத்துக்குடி பொறியாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய சமூக ஆர்வலர் மீது  அவதூறு வழக்கு தொடர பொறியாளர்கள் முடிவு       


தூத்துக்குடி 2020 ஜூன் 4 ;தூத்துக்குடி பொறியாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பியது தொடர்பாக சமூக ஆர்வலர் மீது  அவதூறு வழக்கு தொடர பொறியாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
 இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடியில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம் கடந்த 2.6.2020, 3.6.2020 ஆகிய தேதிகளில் சமூக வலைதளங்களான முகநூல் பக்கம், புலணம், ஆன்லைன் செய்திகளில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வரும் 6 பொறியாளர்கள் குறித்து அவர்கள் அரசிடம் அனுமதி பெறாமலும், முறையாக பொறியாளர் பட்டம் பெறாமல் பதவி உயர்வு பெற்று அவர்கள் பணி செய்து வருவதாகவும், அவர்களது மணம் புண்படும்படியும் அவர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் போலி பொறியாளர்கள் என செய்தி வெளியிட்டிருந்தார். இந்த செய்தியினை பார்த்து படித்த மேற்படி 6 பொறியாளர்களும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் மிகுந்த மன வேதனையும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதனால் மேற்படி தவறான செய்தியினை பரப்பி வரும் நபர் மீது மேற்படி 6 பொறியாளர்களும் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கும், அனல் மின்வாரிய நிர்வாகம் மூலம் குற்றவியல்  வழக்கும் தொடர முடிவு செய்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo