Onetamil News Logo

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,நேரில் சென்று ஆய்வு செய்தார் - நுரையிரல் பாதிப்பு, இரத்தக்கொதிப்பு, சக்கரை நோயாளி, உடல் பருமன், இதய நோய் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சிக

Onetamil News
 

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,நேரில் சென்று ஆய்வு செய்தார் - நுரையிரல் பாதிப்பு, இரத்தக்கொதிப்பு, சக்கரை நோயாளி, உடல் பருமன், இதய நோய் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை 


தூத்துக்குடி  2020 ஆகஸ்ட் 5 ; தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,  இன்று  நேரில் சென்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பிரிவு, சளி மாதிரிகள் சேகரிக்கும் பகுதி, அவசர சிகிச்சை பகுதி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பகுதி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறும் பகுதி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் சுகாதாரத்துறை செயலர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் , கோவிட் 19 தடுப்பு போர்க்கால நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அதேப்போல் கண்காணிப்பு அலுவலர்கள் தங்கள் பணியில் செய்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் நிலைமையை ஆராய்ந்து பார்த்தபோது தூத்துக்குடியிலும் கொரோனா தாக்கம் சற்று ஏறுமுகமாக இருப்பது தற்போது குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இறப்பு வீதம் 0.7 என்ற அளவில் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1.62 ஆக இறப்பு வீதம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிக சிறப்பான அளவில் மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 
மாவட்டத்தில் மேலும் கொரோனா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் மாஸ்க் அணிவது குறைவாக உள்ளது. சுணக்கமாகவும் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வெளியில் வருகையில் மாஸ்க் அணிந்தால் நோய் தடுப்பது சுலபமாக இருக்கும். தூத்துக்குடியில் கடல் சார்ந்த மீனவ பகுதியுள்ளது. இங்கு வீடுகள் அடுத்தடுத்து நெருக்கமாக இருக்கும் இந்த பகுதிகளில் அதிகமான காய்ச்சல் முகாம்களை நடத்திடவும், பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டும். கடந்த நாட்களில் தினசரி 2000த்திற்கு மேல் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினரும் சிறந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 
தமிழ்நாடு முதலமைச்சர் , போர்கால அடிப்படையில் படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு கூறியுள்ளார்கள். ஏற்கனவே 75000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்போது படுக்கை வசதிகள் 118000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்,  விஞ்ஞானிகள் நுன்கிருமிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். நாம் கோவிட் 19 களப்பணியில் உள்ளோம்.  நோய் பரவுவதை தடுக்க கண்டிப்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  சுகாதாரத்துறையின் மூலம் காய்ச்சல் பரவாமல் தடுப்பது, சளி பரிசோதனைகள் செய்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.  தமிழகம் முழுவதும் 50 படுக்கைகளுக்கு கூடுதலாக உள்ள பகுதிகளில்  ஆக்சிசன்  வசதிகள் பேர்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3500க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் உள்ளது. இருப்பினும் அதிக அளவில் ஆக்சிசன் வசதி தேவைபடுகிறது. இதற்கு ரூ.150 கோடியில் ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் இப்பணிகளை 45 தினங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனி கட்டிடங்கள் தேர்வு செய்து கோவிட் சென்டராக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது 1,18,000 படுக்கை வசதியுள்ளது. இதை மேலும் உயர்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைவான அறிகுறி உள்ளவர்களுக்கு கேவிட் கேர் சென்டர்களில் சிகிச்சையளிக்கப்படும். நுரையிரல் பாதிப்பு, இரத்தக்கொதிப்பு, சக்கரை நோயாளி, உடல் பருமன், இதய நோய் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி கே.வி.கே.நகர் பகுதியில் மாநகராட்சி மூலம் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுவதை சுகாதாரத்துறை செயலர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், பார்வையிட்டார். அங்கு முறையாக சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலீலா (தூத்துக்குடி), மரு.அனிதா (கோவில்பட்டி), தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் மரு.சைலேஸ் ஜெபமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.அருண்குமார்,  மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo