Onetamil News Logo

கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்

Onetamil News
 

கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்     


 தூத்துக்குடி 2019 மார்ச் 29 ;பதனீர் என்பது பனை, கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும். இது இனிப்புச் சுவையுடைய ஆல்ககால் அற்ற பானமாகும். பதனீரிலிருந்து கள்ளு,கருப்பட்டி,வினாகிரி என்பன தயாரிக்கப்படுகின்றன.சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல மதுவத்தினால் நொதித்தலடைந்து கள்ளாக மாறும். இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும். பதநீர் உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிர வைக்கும் தன்மை கொண்டது.                                                                                                       பதநீரில் குழந்தைகளின் எடையைக் கூட்டும் சக்தியான இரும்புச்சத்து தயாமின், அஸ்கார்பிக் அமிலம், புரோட்டீன் ஆகிய சத்துகள் உள்ளன. உடலுக்குச் சக்தியைத் தரும் குளுகோஸ், எலும்பு, பல், நகங்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச்சத்து, ரத்தத்தை விருத்தி செய்யும் ரிப்போ பிளோரான் சத்தும் பதநீரில் உள்ளது. கோடையில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும் இனிப்பு மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பதநீரில் போட்டுச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்துவிடும். புளிக்காத பதநீர் எனக் கேட்டு வாங்கிப் பருக வேண்டும். புளித்தால் அது கள் ஆகி போதையை ஏற்படுத்தும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo