Onetamil News Logo

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பதிவான தபால் வாக்குகளை எண்ணுவது தொடர்பாக பயிற்சி 

Onetamil News
 

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பதிவான தபால் வாக்குகளை எண்ணுவது தொடர்பாக பயிற்சி 


தூத்துக்குடி 2019 மே 16: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பதிவான தபால் வாக்குகளை எண்ணுவது தொடர்பாக பயிற்சி மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பதிவான தபால் வாக்குகளை எண்ணுவது தொடர்பாக பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (16.05.2019) நடைபெற்றது. 
பயிற்சியில், மாவட்டஆட்சித்தலைவர் ./ மாவட்டதேர்தல் அலுவலர்  பேசியதாவது:-
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை வருகிற மே 23 அன்று வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிமுதல்தொடங்கவேண்டும். முதலாவதாக தபால் வாக்குகளை எண்ண வேண்டும். வாக்கு எண்ணும் போது ஏதேனும் கட்டுப்பாட்டு கருவியில் பழுது ஏற்பட்டால் அந்தகட்டுப்பாட்டு கருவி தனியாக வைத்திருக்க வேண்டும். மேலும் பேட்டரியில் சார்ஜ் குறைவாக இருந்தால் உடனடியாகபேட்டரிமாற்றவேண்டும். மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவானவாக்குகளின் எண்ணிக்கையும்;,17 யு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டவாக்குகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கவேண்டும். இதில் வித்தியாசம் இருந்தால் அந்தமின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தினை தனியாக வைத்து இறுதியில் எண்ணவேண்டும். வேட்பாளர்கள் அல்லதுவேட்பாளர்களின் முகவர்கள் வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் உள்ளஒப்புகை சீட்டுகளை எண்ணவேண்டும் என்று தெரிவித்தால்,சம்பந்தப்பட்டதேர்தல் நடத்தும் அலுவலர்தான் ஒப்புகைசீட்டுகளைஎண்ணுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவேண்டும்.  இந்தியதேர்தல் ஆணையம் ஏதேனும் 5 வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் உள்ளஒப்புகைசீட்டுகளை எண்ண வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிகளில் இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும்,வாக்கு எண்ணுவது தொடர்பாகஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாககேட்டுதெரிந்துகொள்ளவேண்டும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் தெரிவித்தார். 
கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன்,தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், .,மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மரகதநாதன் (தேர்தல்),சிந்து (நிலம்),தேர்தல் தனி வட்டாட்சியர் நம்பிராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo