Onetamil News Logo

குடியுரிமை சட்டம் இந்து முஸ்லிம்களுக்கு பாதகம் கிடையாது ;தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் பேட்டி

Onetamil News
 

குடியுரிமை சட்டம் இந்து முஸ்லிம்களுக்கு பாதகம் கிடையாது ;தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் பேட்டி 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 20 ;குடியுரிமை சட்டம் இந்து முஸ்லிம்களுக்கு பாதகம் கிடையாது என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறினார்.அவருடன் தெற்கு மாவட்ட தலைவர்  எஸ்.டி.ஆர்.விஜயசீலன்  உடன் இருந்தார்.
மேலும் தூத்துக்குடியில் பல்வேறு விழாவில் பங்கேற்க்க வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது... தூத்துக்குடியில் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்தேன். தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறப்பான வகையில் சிவந்தி ஆதித்தனாருக்கு பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைப்பது பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.பாமர, ஏழைகள் படிக்கும் வகையில் பத்திரிகை துறையை வழி நடத்தியது, இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டு துறையில் சிறப்பாக பணியாற்றியது, கல்வி, ஆன்மீகம், திருப்பணிகள் தொழில் துறை உள்ளிட்டவைகளில் மிகச்சிறந்த பணியாற்றிய சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பதை த.மா.கா. வரவேற்கிறது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எனவே அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை தவிர்த்து யாரும் எதையும் செய்துவிட முடியாது. எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கிக்காக போராட்டம் நடத்த கூடாது. வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo