Onetamil News Logo

ரூ.100 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் 6 திட்டங்கள்  ‘உங்களுடன் நான், உங்களுக்காக ஸ்டெர்லைட் 

Onetamil News
 

ரூ.100 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் 6 திட்டங்கள்  ‘உங்களுடன் நான், உங்களுக்காக ஸ்டெர்லைட் 


 தூத்துக்குடி 2019  ஜனவரி 11: தூத்துக்குடி மக்களுக்காக வரவிருக்கும் மாதங்களில் பெரிய அளவிலான வளர்ச்சி செயல்திட்டங்கள் பல தொடங்கப்படவிருப்பதை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இன்று அறிவித்திருக்கிறது.  ரூ.100 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டிருக்கிற இந்த முதலீட்டின் கீழ், செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களில், தூத்துக்குடி மாநகரின் முன்னேற்றம் மற்றும் புத்துயிர் பெற்ற வளர்ச்சியை முடுக்கிவிடுவதை இலக்காக கொண்ட பல்வேறு முனைப்பு திட்டங்கள் உள்ளடங்கும். தொழில்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருதரப்பினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், ஒரு புத்தாக்கமான ஸ்மார்ட் பள்ளி, உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை, கடல்நீரை தூய்மையாக்கி குடிநீராக்கும் ஆலை ஆகியவை தொடங்கப்படுவது இதில் உள்ளடங்கும்.  வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் தொழில்முனைவு திறன் ஆகியவற்றின்மீது சிறப்பு கவனம் செலுத்தும் இளைஞர் மேம்பாடு திட்டங்களும்  செயல்படுத்தப்பட உள்ளன.  தூத்துக்குடி மாவட்டத்தின் பசுமை போர்வையை இன்னும் மேம்படுத்தும் நோக்கத்தோடு தூத்துக்குடி நகரிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் 10 இலட்சம் மரக்கன்றுகளை நடவும் இந்நிறுவனம் உறுதிபூண்டு திட்டங்களை வகுத்து வருகிறது.  இந்த முக்கியமான செயல்திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, தூத்துக்குடிவாழ் மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.  உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் உடல்நல பராமரிப்பு சேவைகள் தூத்துக்குடி நகரிலேயே பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டங்களை ஸ்டெர்லைட் அமல்படுத்தவிருக்கிறது. 
இச்செயல்திட்டங்கள் குறித்து பேசி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  பி. ராம்நாத், கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், தூத்துக்குடி நகரமும் கொண்டிருந்த, நெருக்கமாகப் பின்னிப்பிணைந்த நல்லுறவையும், வளர்ச்சியை இலக்காக கொண்ட குறிக்கோளையும் இந்த புதிய செயல்திட்டங்கள் இன்னும் வலுவாக்க உதவும் என்பது எங்களது நம்பிக்கையாகும்.  இன்றைக்கு உலகளவில் தொழில்நுட்ப ரீதியில் மிக நவீன உருக்காலைகளுள் ஒன்றாகவும் மற்றும் மிகப்பெரிய ஆலைகளுள் ஒன்றாகவும் ஸ்டெர்லைட் காப்பர் வளர்ந்து உயர்ந்திருப்பது, தூத்துக்குடிவாழ் மக்களின் ஆதரவு மற்றும் ஆசிர்வாதங்களினால் தான் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது.  இப்போது, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு முன்னேற்றத்தை நோக்கி எமது பயணத்தை தொடர்வதையும் மற்றும் எமது நல்லுறவை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச் செல்வதையும் நாங்கள் ஆவலோடுஎதிர்நோக்கியிருக்கிறோம்,”என்று கூறினார்.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் நான், உங்களுக்காக ஸ்டெர்லைட்’என்ற பெயரில் ஸ்டெர்லைட்டின் தலைமைச் செயல் அலுவலர் – சமூகத்தொடர்பு முனைப்பு திட்டத்தின் தொடர் நிகழ்வாக இப்புதிய செயல்திட்டங்கள் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக திட்டப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட்டின் தலைமைச் செயல் அலுவலரோடு தூத்துக்குடியின் உள்ளுர் சமூகத்தைச் சேர்ந்த 1500-க்கும் அதிகமான  மக்கள் நேரடியாக கலந்துரையாடினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை கூடியவிரைவில் மீண்டும் திறக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதோடு, சமூகநல திட்டங்களுக்காக எண்ணற்ற யோசனைகளையும், வேண்டுகோள்களையும் முன்வைத்தனர்.  இந்த யோசனைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை ஸ்டெர்லைட் அடையாளம் கண்டிருக்கிறது.  ஆகவே, இச்செயல் திட்டங்கள் அனைத்தும் தேவைகள் அடிப்படையில் மற்றும் சமுதாய நலன் நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கும்.  உள்ளுர் சமூகத் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசு முகமைகளோடு விரிவான கலந்தாலோசனை செய்தபிறகு இச்செயல்திட்டங்களை தொடங்க ஸ்டெர்லைட் திட்டமிட்டிருக்கிறது.  வரும் ஆண்டில் இத்திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி திட்டத்தின் பயனாளிகளுள் ஒருவரான என்.லட்சுமி இந்த அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பேசுகையில், “இந்த புதிய திட்டங்கள், எங்களது குடும்பங்களுக்கு உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதமாக இருக்கும்.  முடிந்தவரை விரைவாக தூத்துக்குடியில் வசிக்கும் எண்ணற்ற மக்கன் பலனடையும் வகையில் இத்திட்டங்களை ஸ்டெர்லைட் விரைவில் செயல்படுத்த வேண்டும்.  இச்செயல்திட்டங்களுக்கு அரசு முழுஆதரவையும் வழங்கவேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு அருகே  இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த கே.முத்து,“எங்களது கிராமத்தைச் சேர்ந்த எங்களது குடும்ப ஆண் பிள்ளைகளும், மகள்களும் ஸ்டெர்லைட்டில் பணியாற்றி வருகின்றனர்.  தூத்துக்குடி மாநகருக்கு இந்நிறுவனம் ஏராளமான நல்ல விஷயங்களை கொண்டு வந்திருக்கிறது.  ஸ்டெர்லைட்டின் ஆதரவோடு நாங்கள் இன்னும் வளர்ந்து முன்னேற்றம் காண்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த செயல்திட்டங்கள் கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்,”என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo