Onetamil News Logo

உறியடி 2 படத்தின் கதாநாயகனும் டைரக்டரும் ஆகிய விஜய குமார் தூத்துக்குடி வருகை ;ரசிகர்கள் ஆரவாரம் 

Onetamil News
 

உறியடி 2 படத்தின் கதாநாயகனும் டைரக்டரும் ஆகிய விஜய குமார் தூத்துக்குடி வருகை ;ரசிகர்கள் ஆரவாரம் 


தூத்துக்குடி 2019 ஏப்.8: உறியடி 2 படத்தின் கதாநாயகனும் டைரக்டரும் ஆகிய விஜய குமார் தூத்துக்குடியில் உள்ள கே.எஸ்.பி.எஸ். திரையரங்கு சென்று அவர்களது ரசிகர்களை சந்தித்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
ஒவ்வொரு மனிதனும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இன்னொரு சக மனிதனின் தயவோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.நம்மில்  பலர் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் சமூகத்திற்கு பல்வேறு நல்ல செயல்கள் மற்றும் செய்திகளை தெரிவிக்கின்றனர்.அதேபோல் நான் ஒரு கலைஞன் என்ற முறையில் திரைப்படத்தின் மூலமாக சமுதாய விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றேன்.
தொடர்ந்து இதே போல் சமூக சிந்தனை கொண்ட படங்கள எடுப்பேன்.அதேபோல் படத்தில் காதல் தேவையான சிறிதளவு மட்டுமே இடம்பெறும் . படத்தின் மைய புள்ளி சமூக சீர்திருத்தம் ஆகும்.
மேலும்  படிக்கின்ற மாணவர்களுக்கு அரசியல் பற்றிய சிந்தனை மற்றும் ஈடுபாடு வேண்டும் .உலகின் மிக சிறந்தது இளைஞர்களின் ஆற்றல் ஆகும்.அந்த ஆற்றலை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டும் ஆதலால் அரசியல் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.அரசியலில் மாற்றம் கொண்டு வர இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
மேலும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகள் பற்றி வருகின்ற தேர்தலில் வெளிப்படும்.தற்போதைய சூழ்நிலையில் மக்களின் குறைகளை தீர்த்து வைக்க அரசு செவி சாய்ப்பதில்லை .மக்களின் பிரச்சனைகள் குறித்து அறிந்து அரசு செயல்பட வேண்டும்
மேலும் எந்த ஒரு இந்திய குடிமகனாக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.மக்கள் அவர்களது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.சினிமா துறையில் இருந்து அரசியல் வரவதால் ஒருவரை பெருமை படுத்தி பேசுவது அல்லது சிறுமை படுத்தி பேசுவது தேவையற்றது என கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo