Onetamil News Logo

உதயநிதி ஸ்டாலின் -க்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக் கூறினார்.

Onetamil News
 

உதயநிதி ஸ்டாலின் -க்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக் கூறினார்.


தூத்துக்குடி  2019 ஜூலை 12 ;திமுக மாநில இளைஞர் அணி மாநில செயலாளராக பொறுப்பேற்றுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு  ஓட்டப்பிடாரம் வட்டம் ,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக் கூறினார்.                                                                                                                                                       
தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான முரசொலி மேலாண்மை இயக்குனருமான  உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.இவர் ரெட் செயின்ட்  மூவிஸ்  திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். 
விசய், திரிசா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும், உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
திமுக வின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார் .மே மாதம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு ஆண்டாக முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார். இந்தச் செய்தி இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்ட உதயநிதி இசுடாலினுக்கு அதிகாரபூர்வமாக 04.07.2019 அன்று காலை 11:00 மணி்க்கு மேல் தெரிவிக்கப்பட்டது. முதலில் பதவிவேண்டாம் என மறுத்த உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.                                                                                                                                                                         
 இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ,ஓட்டப்பிடாரம் வட்டம் ,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo