Onetamil News Logo

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார். 

Onetamil News
 

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார். 


 தூத்துக்குடி 2020 ஜனவரி 21 ;தூத்துக்குடியில்  போக்குவரத்துத் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.  
தூத்துக்குடியில் போக்குவரத்துத் துறையின் சார்பில்  சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில்; இன்று (21.01.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஒட்டி வந்தவர்களுக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது: நாடு முழுவதும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும், வாகன போக்குவரத்து சீர்செய்ய வேண்டும் என்பதற்காகவும் சாலை பாதுகாப்பு வார விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம்  31வது சாலை பாதுகாப்பு வார விழா”சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு“ என்ற கருத்தின் அடிப்படையில் 20.01.2020 முதல் 27.01.2020 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது நாளான இன்று சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது.  தொடர்ந்து, பள்ளி அளவிலும், வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையங்களிலும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும்;  பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துகளையும் மற்றும் உயிரிழப்புகளையும் குறைத்தமைக்காக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு  விருது வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் அவர்கள் 13.01.2020 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய விருதை பெற்றுக்கொண்டார். சாலை விதிகளை மிக சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாகத்தான் இந்த விருது தமிழக அரசுக்கு கிடைத்தது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக தமிழக அரசு போக்குவரத்து துறை மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,217 சாலை விபத்துகளில் 303 நபர்கள்; உயிரிழந்துள்ளனர். 2018ம் ஆண்டைவிட 2019ம் ஆண்டு சுமார் 13 % விபத்துக்கள் குறைந்துள்ளது.  விபத்துகளை 0 சதவிதமாக குறைக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கோயில்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்ளில் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை  மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை விதிகளை பொதுமக்கள் தெரிந்துகொண்டு விபத்தில்லா மாநிலத்தை உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்; அவர்கள் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன்,, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன்( திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்), மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பொ.செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மன்னர்மன்னன் (தூத்துக்குடி), சந்திரசேகர் (கோவில்பட்டி), சக்திவேல் (திருச்செந்தூர்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேஷ்(தூத்துக்குடி) நூர்கனி(கோவில்பட்டி), உலகநாதன் (திருச்செந்தூர்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் கண்ணன், நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் எம்பவர் சங்கர், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், ஏஷாதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo