Onetamil News Logo

தூத்துக்குடி மில்லர்புரம் புஷ்பா நகரில் புஷ்பா நகர் மக்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம்  ;  "அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணுங்கள்"  எஸ்.ஐ .  முத்து கணேஷ் பேச்சு   

Onetamil News
 

தூத்துக்குடி மில்லர்புரம் புஷ்பா நகரில் புஷ்பா நகர் மக்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம்  ;  "அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணுங்கள்"  எஸ்.ஐ .  முத்து கணேஷ் பேச்சு     


                                                           
தூத்துக்குடி  2019 பிப்ரவரி 11 ; தூத்துக்குடி மில்லர்புரம் புஷ்பா நகரில் புஷ்பா நகர் மக்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் சுமார் 150 ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் வருகையின்போது நகர் மக்கள் நல் மரியாதையுடன் எழுந்து நின்று ஆரவாரமாய் கைதட்டி மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். முன்னாள் தலைமை காவலர் மற்றும் சங்கத் தலைவர் சப்பானி முத்து  முன்னிலையில் செயலர்  ராஜேஷ்  அனைவரையும் வரவேற்று பேசி விழாவினை ஆரம்பித்து வைத்தார்கள்.
தூத்துக்குடி சிப்காட் காவல் உதவி ஆய்வாளர்  முத்து கணேஷ்  காவல் பாதுகாப்பு ஆலோசனைகள் பல கூறினார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, குடும்ப பிரச்சனை நீக்கம் மற்றும் வாகன விபத்து இல்லாமை பற்றி விளக்கிக் கூறினார்கள். "அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணுங்கள்" என வலியுறுத்தினார்கள். "காவல்துறை உங்கள் நண்பன்" என்றார்கள். அவர்களை மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள். மேலும் காவல் ஆய்வாளர்  வி சம்பத் , நகர் மக்களின் சந்தேகங்களுக்கு மிகப் பொறுமையாக தெளிவான விளக்கமளித்தார்கள். கண்காணிப்பு கருவி, காவலன் மென்பொருள் செயலி ஆகியனவற்றின் பயன்களைப் பற்றி கூறினார்கள். இப்பகுதிக்கு தேவையான புறநகர் காவல் அமைக்க ஏற்பாடு செய்வேன் என உறுதி கூறினார்கள். உங்களின் ஆபத்து நேரங்களில் உடனே எங்களை அழையுங்கள். நாங்கள் எந்த நேரமும் ஓடோடி வந்து உங்களுக்கு உதவுகின்றோம் என கூறினார்கள். அவர்களை மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள். காவல்துறை குற்றவியல் புலனாய்வு பிரிவு முருகேசன் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்
அதன் பின்னர் சுகாதாரத்துறை அலுவலர்  ஹரிகணேசன்  சுகாதார விழிப்புணர்வு பற்றி ஆழமான கருத்தாய் சிறப்புரையாற்றினார்கள்
விருந்தினர்கள் அனைவருக்கும் சங்க பொறுப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். காவல்துறை ஓய்வு மற்றும் சங்க ஆலோசகர் கிறிஸ்டோபர் , தபால் துறை மற்றும் சங்க பொருளாளர் சங்கர் அவர்கள், சங்க செயற்குழு உறுப்பினர்கள்  ஆல்வின் அவர்கள்,  கண்ணன் ,  கவிமகன்  ஜெகன்  மற்றும் பல நண்பர்களின் ஒத்துழைப்பும் நகர் மக்களின் ஆதரவும் கூட்டம் நன்றாக அமைய காரணமாய் இருந்தது. சங்க உறுப்பினர்  ரமணி  நன்றியுரை கூறினார். கூட்டம் இனிதாய் நிறைவேறியது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo