Onetamil News Logo

50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணியினரின் சார்பில் நிவாரணம் வழங்கும் முகாம் 

Onetamil News
 

50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணியினரின் சார்பில் நிவாரணம் வழங்கும் முகாம் 


தூத்துக்குடி 2020 ஜூன்  2 ;50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணியினரின் சார்பில் நிவாரணம் வழங்கும் முகாம் நடைபெற்றது. 
உலகை அச்சுறுத்தும் கொரனா தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஊரடங்கினால் பாதிப்புகளுக்குள்ளான தூத்துக்குடியின் 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன் சார்பாக ரூ.1000/- மதிப்புள்ள அரிசி, காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.  காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் து.நாகராஜன் கல்லூரியின் தாளமுத்துநகர் காவல் ஆங்வாளர் பிரேமா ஸ்டாலின் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். 
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டளருமான முனைவர் ஆ.தேவராஜ், கல்லூரி அலுவலர் மா.நாராயணன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உடனிருந்தனர். 
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் கொரனா தொற்று – ஊரடங்கு துவங்கிய நாளிலிருந்து காமராஜ் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அணியினர் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட சந்தை, நியாயவிலைக்கடைகளில் மக்களை சமுதாய தூரம் கடைப்பிடிக்க வைத்தல், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகர மற்றும் மாவட்ட மக்கள் நல்வாழ்வுப் பணியாளர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு உதவுதல் போன்ற பணிகளில் பங்கேற்று வருகின்றனர். 
மேலும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களால் தயார் செய்யப்பட்ட 1000 முகக்கவசங்கள் ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  அதனடிப்படையில் இன்னும் பல்வேறு பணிகளை காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo