Onetamil News Logo

கொரோனா எதிரொலி ;சிப்காட் காவல் நிலையத்தில் கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வர  ஏற்பாடு ; தூத்துக்குடி ஊரக  துணை காவல் கண்காணிப்பாளர் பா.கலை கதிரவன்  பங்கேற்பு 

Onetamil News
 

கொரோனா எதிரொலி ;சிப்காட் காவல் நிலையத்தில் கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வர  ஏற்பாடு ; தூத்துக்குடி ஊரக  துணை காவல் கண்காணிப்பாளர் பா.கலை கதிரவன்  பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 மார்ச் சனிக்கிழமை 21 ;தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் நிலையத்திற்கு வரும் அனைவரும் கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வர வேண்டும் என்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இதற்காக காவல் நிலையங்களில் தண்ணீர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி ஊரக  துணை காவல் கண்காணிப்பாளர் பா.கலை கதிரவன் செய்தியாளர்களிடம் கூறினார். 
 இதனால் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் காவலர்கள் குடியிருப்பு மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில்  வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகழுவிவிட்டு உள்ளே செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு உள்ளே வரும் பொழுது தங்கள் கைகளை கழுவிவிட்டு செல்கின்றனர்.இந்த நிகழ்வில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo