Onetamil News Logo

தூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்

Onetamil News
 

தூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்   


தூத்துக்குடி 2019 மே 21 ;தூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் புகார் மனு அளித்துள்ளனர்.                                                                                 கட்சி நிர்வாகிகள் அதில் அவர்கள் கூறியதாவது...நம்மவர் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கி சாதி மத பேதமின்றி தமிழக மக்களின் நல்வாழ்விற்க்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் எம் கட்சியின் தலைவர் பேசியதை அரசியல் ஆதாயத்திற்காக திரித்துப் பேசியதுடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எம் கட்சித்தலைவர் கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டுமென மிரட்டல் விடுத்துள்ளார். அவரது பேச்சினால் தூண்டப்பட்டு அவரது கட்சியினரும் பிற அமைப்புகளும்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரத்திலும் எம் தலைவர் கலந்து கொண்ட கூட்டத்திலும் கலந்துகொண்ட தொண்டர்கள் மீது கல்வீசியும்,சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.ஆகையால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.இதில் வழக்கறிஞர்கள் ரெங்கநாதன், பிரகாஷ், பட்டுராஜ்,பாண்டி,மணிகண்ட ராஜா,கைதான் ஐயா மொராஸ் ,மங்கல்ராஜ் ,ஆல்வின் ரஸ்ஸல் விக்டோரியா,ஆண்ட்ருஸ் கிளாட்சன்,குணசேகரன்,அஜித் அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் சிவகுமார் ,சந்திரா சேகர் ,சூசை அந்தோணி,நெல்சன்,ஆட்டோ சுப்ரமணி,ராஜா,கமல் பொன் ,ஜே. .ஆர்.ராஜா,  பேச்சாளர் சண்முகசுந்தர ராஜா,ஜான்சன்,மணிராஜ்,ஸ்டீபன்,புஸ்பலதா ,வேலாயுதம்,கெல்வின் ராயன்,கமல் பிரிட்டோ,செல்வம்,ஜெபசிங்,ராஜ், மற்றும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo