Onetamil News Logo

V.சாமுவேல்நாடார் வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் நிறுவனர் தின விழா ;ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் தமாகா தலைவர் ஜி.கே வாசன் தூத்துக்குடியில் பேச்சு

Onetamil News
 

V.சாமுவேல்நாடார் வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் நிறுவனர் தின விழா ;ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் தமாகா தலைவர் ஜி.கே வாசன் தூத்துக்குடியில் பேச்சு    


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 9 ;தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள எஸ்டிஆர் பள்ளி வளாகத்தில்  சாமுவேல்நாடார் வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் நிறுவனர் தின விழா ஆகியவை நடைபெற்றது.                                                                                                             இந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமை தாங்கினார். இதில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு பொன்சீலன் ,விஜயசீலன்,ஆகியோர் தாத்தா சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலர் எம்.எல்.ஏ கீதாஜீவன், எஸ்டிஆர் புதல்வர்கள் விஜயசீலன், பொன்சீலன், சாமுவேல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி உட்பட பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் போன்றோர் பங்குபெற்றனர்.                                                                                                                 அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் அவரது பள்ளி வளாகத்தில் அவரது தாத்தா V.சாமுவேல்நாடார் சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த சாமுவேல் நாடார் இலங்கையில் வணிகம் புரிந்து அதன் பின்னர் அவர் தூத்துக்குடிக்கு வந்து 1940ம் ஆண்டுகளிலேயே தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பொருளாதரம் மட்டுமல்லாது அவர் பல்வேறு வடிவங்களில் முக்கிய பங்காற்றி இருந்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூறுவோம். தற்போது வெளிவரும் கூட்டணி குறித்த செய்திகள் அனைத்தும் ஹேஸ்யமும், ஜோதிடமும் போல தான் இருக்கிறது. தொண்டர்களின் விருப்பப்படி தான் கூட்டணி அமையும் தமிழக வரலாற்றில் கூட்டணி கட்சிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் சூழல் இன்று எந்த கட்சிக்கும் கிடையாது. ஆகையால் தமாகா அதற்கு விதிவிலக்கு இல்லை. தொண்டர்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து  கேட்டு வருகிறேன். மக்களுடைய மனநிலைக்கு ஏற்ப ஒத்தக் கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமையும். இரண்டு அரசுகளின்  செயல்பாடுகளைப் பொறுத்த வரையில் அதன் செயல்பாடுகள் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும்.இன்னும் வளரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்து வருகிறது. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். பட்டாசு தொழில் மிகவும் நலிந்து வருகிறது. அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு நல்ல செய்தி தர வேண்டும். தமிழகஅரசு பட்ஜெட்டை பொறுத்தவரையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கியதால் அவற்றை வரவேற்கிறேன்.. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும். விவசாயம்,கல்வி போன்றவற்றிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.தூத்துக்குடியில் வெறும் பூங்காக்கள் மட்டும் ஆங்காங்கே அமைந்து வருகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகளை நிறைவேற்றவேண்டும்  தூத்துக்குடியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டிட வேண்டும். தூத்துக்குடி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்திடபோக்குவரத்தை குறைத்திட நெரிசலில் இருந்து பொதுமக்கள் மீண்டிட  ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு இடம் மாற்ற வேண்டும். என்று கூறினார்.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo