Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்;கலெக்டர் தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்;கலெக்டர் தகவல்


தூத்துக்குடி 2018 அக்டோபர் 10 ;தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
 2018-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 31.10.2018-க்குள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo