Onetamil News Logo

தூய்மை பாரத இயக்கம் - குப்பை இல்லா பாரதம்   

Onetamil News
 

தூய்மை பாரத இயக்கம் - குப்பை இல்லா பாரதம்             


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 14 ;தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56 இன் சார்பில், மஞ்சள்நீர்காயல் கிராமத்தில் ஒருவார குப்பை இல்லா பாரத இயக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  இம்முகாமிற்கு மஞ்சள்நீர்காயல் பஞ்சாயத்து தலைவி விஜயா  தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் து. நாகராஜன் முகாமை துவக்கி வைத்து பேசினார். அப்போது, குப்பை இல்லாத பாரத இயக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மரம் இருந்தால் தான் சுவாசத்துக்கு தேவையான சுத்தமான காற்று கிடைக்கும் என்றும் எனவே, அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வீட்டுக்கு ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் முனவைர் து. நாகராஜன் கேட்டுக் கொண்டார்.
  நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் மூலமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதால் அனைத்து மாணவர்களும் தங்கள் பகுதியை குப்பை இல்லாத பகுதியாக மாற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள இந்நாளில்  உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
  நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆ.தேவராஜ் வரவேற்புரையாற்றினார்.  ஒருவார முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மஞ்சள்நீர் காயல் பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்களிடம் நெகிழி கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்தப் பகுதியில் நட்டனர்.
 திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் மாசு, குடிநீர் மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்தும் விளக்கம் அளித்த மாணவர்கள் அந்தப் பகுதியில் உள்ள நூலகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வண்ணம் தீட்டி விழிப்புணர்வு வாசகங்களை எழுதினர்.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  திருநங்கைகளால் நடத்தப்படும் சகி கலைக்குழு மூலம் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம், மற்றும் பாரம்பரிய கலைகள் மூலம் குப்பை இல்லா பாரதம் குறித்த விழிப்புணர்வையும், அவசியத்தையும்; மிக எளியமுறையில் எடுத்துரைத்தனர்.

 மக்களிடம் அன்றாடம் இவ்விழிப்புணர்வுகளை கொண்டுசேர்க்கும் வண்ணம் அரசு அங்கீகரித்த இடங்களில் பொதுமக்களுக்கு நினைவூட்டக்கூடிய குப்பை இல்லா பாரத இயக்க வாசகங்கள் பெயிண்டினால் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் எழுதப்பட்டது.
முனைவர் பா.பொன்னுத்தாய் நன்றியுரையாற்றினார்.  இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மஞ்சள்நீர்காயல் பஞ்சாயத்து தலைவி விஜயா, துணைத் தலைவர் பாலமுருகன், காமராஜ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவரும், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலருமான ஆ. தேவராஜ், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை முனைவர் பா. பொன்னுத்தாய் ஆகியோர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo