தூத்துக்குடி மாவட்ட டேக்வாண்டோ சங்கம் 2020ம் ஆண்டிற்கான மாவட்ட டேக்வாண்டோ போட்டி
தூத்துக்குடி 2020 பிப்ரவரி 7 ; தூத்துக்குடி மாவட்ட டேக்வாண்டோ சங்கம் 2020ம் ஆண்டிற்கான மாவட்ட டேக்வாண்டோ போட்டியை தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடத்தியது அதில் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்டமாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.தா. செல்லப்பாண்டியன் சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுபோட்டியைதொடங்கிவைத்தார்கள். தூத்துக்குடிமாவட்டதுணைக்கண்காணிப்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்ற அணியினர்க்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்கள். போட்டிகளுக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி டேக்வாண்டோ மாவட்ட செயலாளர் செல்வம் கிறிஸ்டோபர் செய்திருந்தார். மேலும்,துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் ,விளையாட்டு குறித்து பெற்றோர்க்கு மாணவ மாணவியர்க்கு விளையாட்டு போட்டியின் நன்மைகளை எடுத்துக் கூறினார். படிப்பு மட்டுமில்லாமல் செல்போன், வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுபோட்டிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்க வேண்டும் எனஅறிவுரை வழங்கினார்கள். மேலும்,போட்டிகளில் சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, எக்ஸன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அழகர் பப்ளிக் பள்ளி, ஈசா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி,பெல் மெட்ரிக்குலேஷன் பள்ளிஆகியவை பரிசு கோப்பைகளை வென்றனர். வெற்றிபெற்ற அணியினரை தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.