Onetamil News Logo

தூத்துக்குடி அருகே வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா

Onetamil News
 

தூத்துக்குடி அருகே வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா


தூத்துக்குடி,2020 பிப்ரவரி 26 ;வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு வேப்பலோடை அரசு கிளை நூலகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.அன்னை தெரசா கிராம பொது நல சங்க செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ் தனது தொடக்கவுரையில் தினசரி மாலை 4.45 முதல் 05.45 வரை வேப்பலோடை அரசு நூலகம்& வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்கம் சார்பில் பொது அறிவு வகுப்பு நடைபெறும் எனவும்,மாதம் ஒரு முறை பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.சிறப்புரை ஆற்றிய வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்,பொது அறிவுப்போட்டியில் தொடர்சியாக கலந்து கொள்ளும் மாணவர்களை வரலாற்று சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் எனவும்,பிற இடங்களில் நடைபெறும் வினாடி - வினா போட்டிகளிர் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவர் என குறிப்பிட்டார்.விழாவில் 50 உறுப்பினர்களும்,ஒரு புரவலர்களும் வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டனர்.இதுவரை வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் 402 புரவலர்களும்,1959 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைவாக அன்னை தெரசா கிராம பொதுநல சங்க பொருளாளர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo