Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட அளவிலான 2ம் ஆண்டு ஸ்டென்த் (strength Lifting) லிப்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் எஸ்.பி.அருண் பாலகோபாலன் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட அளவிலான 2ம் ஆண்டு ஸ்டென்த் (strength Lifting) லிப்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் எஸ்.பி.அருண் பாலகோபாலன்   


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 19 ;  தூத்துக்குடி மாவட்ட அளவிலான 2ம் ஆண்டு ஸ்டென்த் (strength Lifting) லிப்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,   பரிசு வழங்கி பாராட்டினார்.
நேற்று (18.08.2019) காரப்பேட்டை நாடார் பள்ளி வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான 2ம் ஆண்டு ஸ்டென்த் லிப்டிங் போட்டி நடைபெற்றது. 
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் உடற்பயிற்சிக்கூட மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டி 7 வகையான பிரிவுகளில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது இப்போட்டியில் 30 சதவீத பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இது போன்ற விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 
இந்த தருணத்தில் சாலை பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது.  இரு சக்கர வாகன் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் அனைரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். அதே போன்று நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும். நீங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பீர்கள். நீங்கள் சொன்னால் குறைந்தபட்சம் பத்து பேராவது கேட்பார்கள். ஆகவே நீங்கள் உங்களுக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்களிடம் சாலை விதிகளை கடைபிடிக்குமாறு எடுத்துரைத்;து சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்ப்பதற்கு உதவுங்கள். 
பொதுமக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் ‘அவுட் ரீச் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உங்களைப்போன்ற ஆர்வமுள்ள விளையாட்டு வீராகள்; மற்றும் வீராங்கனைகளை பயன்படுத்த உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அனைவரையும் ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.  
இந்த விளையாட்டுப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட ஸ்டென்த் சங்க பொதுச் செயலாளர் ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றி, அன்னை ஜீவல்லர்ஸ் விநாயகமூர்த்தி முன்னிலையில் காரப்பேட்டை நாடார் மகமை தலைவர் நடராஜன்  துவக்கி வைத்தார். 
இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo