Onetamil News Logo

சர்வர் வேலை செய்யாததால் மாணவர்கள் தேர்வுக்கட்டணம் கட்ட முடியாமல் திணறல்;அபராத கட்டணம் 2 நாளில் கட்ட ரூ 1000 ;பகல்கொள்ளை அடிக்கும் மனோன்மணியம் பல்கலைக்கழகம்

Onetamil News
 

சர்வர் வேலை செய்யாததால் மாணவர்கள் தேர்வுக்கட்டணம் கட்ட முடியாமல் திணறல்;அபராத கட்டணம் 2 நாளில் கட்ட ரூ 1000 ;பகல்கொள்ளை அடிக்கும் மனோன்மணியம் பல்கலைக்கழகம் 


 தூத்துக்குடி 2018 அக்டோபர் 9 ;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1990 செப்டம்பர் 7 ஆம் நாள் திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் செயல்பட்டுவருகிறது.
இந்தப்  பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் உள்ள 102 கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக அதிகாரத்தின் கீழ் பட்டியலில் 65,000 மாணவர்கள், 61 இணைப்பு கல்லூரிகள், 5 மனோ கல்லூரிகள் மற்றும் 1 சட்டக்கல்லூரி உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU) , அதாவது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தெற்கு மாவட்டங்களில் உள்ள மக்களின் நீண்ட கால கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்ய 7 செப்டம்பர் , 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட்து.
இந்த பல்கலைக்கழகத்தில்  தேர்வு கட்டணம் கட்டுவது எல்லாம் ஆன்லைன் மூலம் கட்டப்படுகிறது.ஆனால்  தேர்வு கட்டணம் கட்ட நாளை 10 ம் தேதி கடைசி தேதியாகும்.இதனால் மாணவர்கள் தேர்வு கட்டணம் கட்ட இன்று கல்லூரி அலுவலகங்களில்  காத்திருந்தனர்.ஆனால் சர்வர் வேலை செய்யாததால் மாணவர்கள் தேர்வுக்கட்டணம் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.12 ம் தேதி வரை தேர்வு கட்டணம் கட்டலாம்,ஆனால் அபராத கட்டணம் மட்டும்  ரூ 1000 ;இந்த பகல்கொள்ளை அடிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  சர்வரை முடக்கிவைத்துள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர். அக்டோபர் 12ம் தேதிக்குப்பின்னர்  தேர்வு கட்டணம் கட்ட முடியாது என்றும் கூறுகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo