தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்து, 46% கலோரிஸ் மற்றும் 6% கார்போ ஹைட்ரேட்
தூத்துக்குடி 2020 மார்ச் 18 ; கோடைகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். கோடை காலம் வந்துவிட்டாலே போதும் நம் உடல் அதிகமாக வறட்சி அடையும், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
இந்த கோடைகாலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்சத்து வேர்வை மூலமாக வெளியேறும், இதனால் உடல் எளிதில் வறட்சியடைந்து சருமம் பொலிவிழந்து காணப்படும், எப்பொழுது பார்த்தாலும் தாகமாக இருக்கும், மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சிறந்த அற்புதமான பழமாக தர்பூசணி விளங்குகிறது.
கோடையில் மிக எளிதாக கிடைக்கும் இந்த தர்பூசணியில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.உடல் நலத்திற்கு அதிக ஊட்டச்சத்து அளிக்க கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இந்த தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் கார்போ ஹைட்ரேட் ஆகியவை உள்ளது.
100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்து, 46% கலோரிஸ் மற்றும் 6% கார்போ ஹைட்ரேட் உள்ளது.
இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது, உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது. மேலும் தர்பூசணியில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இத்தகைய தர்பூசணியை, தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளும் சரியாகும். கோடையில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபமாக வறட்சி அடைகின்றது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது.
கோடை காலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. மேலும் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்