Onetamil News Logo

அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மற்றும் ரூ.9.31 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி

Onetamil News
 

அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மற்றும் ரூ.9.31 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி



தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ; தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மற்றும் ரூ.9.31 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெரு பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மற்றும் ரூ.9.31 கோடி மதிப்பில அண்ணாநகர் 3வது தெரு பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  இன்று (24.01.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணாநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய் ஒரு மாதத்திற்கு முன்பாக சேதம் அடைந்தது. இதனை உடனடியாக மாநகராட்சி மூலம் சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் குடிநீர் வழங்கும் குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பணிகளை விரைவில் முடித்து தேவையான குடிநீரை பொதுமக்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.  
அதனைத்தொடர்ந்து அண்ணாநகர் 7வது தெரு, 5வது தெரு பகுதிகளையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாநகராட்சியின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.9.31 கோடி மதிப்பில் அண்ணாநகர் 3வது தெரு பகுதியில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளையும்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  நேரில் ஆய்வு செய்து  பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
ஆய்வின்போது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகராட்சி செயற்பொறியாளர் பாத்திபன், உதவி பொறியாளர் பிரின்ஸ், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார், மின் கண்காணிப்பாளர் மாரிமுத்து, இளநிலை பொறியாளர் பாண்டி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo