Onetamil News Logo

வடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருந்திட 1077க்கு தெரிவிக்கலாம். ; 9486454714 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் 

Onetamil News
 

வடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருந்திட 1077க்கு தெரிவிக்கலாம். ; 9486454714 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் 


தூத்துக்குடி 2019 அக் 16 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி            வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இடி மின்னலினால் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பொது மக்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடி மின்னல் ஏற்படும் முன் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள்:
1. எப்போதும் அவசர கால கருவிகள் (உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய பை ) மற்றும் குடும்ப நபர்களின்  போன் நம்பர் பற்றிய விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
2. பட்டுப்போன மரங்கள் மற்றும் மரக்கிளைகளை உடனடியாக அகற்றிட வேண்டும்.
3. மின்னலைக் கண்ட 30  வினாடிகளுக்குள் இடி சத்தம் கேட்பதால் உடனடியாக கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல வேண்டும். கடைசியாக கேட்கப்பட்ட இடி சத்தங்களுக்கு பின் 30 நிமிடங்களுக்கு வீட்டின் உள்ளேயே  இருக்க வேண்டும். 
4. வெளியில் இருந்து பறந்து வந்தோ அல்லது தாக்கியோ சேதத்தை விளைவிக்கும் பொருட்களைக் கண்டறிந்து அதிலிருந்து விலகி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
5. இடி மின்னலைக் கண்டவுடன் வீடு, கட்டிடம் மற்றும் உறுதியான வாகனங்களுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
6. ரப்பர் காலணிகள் மற்றும் ரப்பர் உபகரணங்கள் மின்னலிலிருந்து  எவ்வித பாதுகாப்பும் அளிப்பதில்லை.
7. வீடுகள் / கட்டிடங்களின் சன்னல் மற்றும் கதவுகளை அடைத்தும், சன்னல் கதவு இல்லாத பட்சத்தில் சன்னல்களை திரைச்சீலையைக் கொண்டோ மறைக்கவேண்டும். 
8. மின் சாதனங்களை மின் இணைப்புகளிலிருந்து அகற்றிட வேண்டும். 
இடி மின்னலின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்  ;
1. பேட்டரியில் (Battery)  செயல்படும் ரேடியோ உபகரணங்கள் மூலம் வானிலை தொடர்பான செய்திகளைக் கேட்க வேண்டும். 
2. மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள போன்களை  தொடக் கூடாது.
3. மின் சாதனங்களை தொடக் கூடாது. கம்யூட்டர் போன்ற மின் சாதனங்களை மின் இணைப்பில் இருந்து கழற்றி அணைத்து வைக்க வேண்டும். 
4. இரும்பிலான குழாய்களில் வரும் தண்ணீரை தொடவோ பாத்திரங்களை கழுவுவதோ கூடாது.
5. ஜன்னல் மற்றும் கதவிற்கு  அருகில் நிற்கக் கூடாது.
6. உயரமான மற்றும் மைதானத்தில் (வெட்ட வெளியில்) தனியாக உள்ள மரங்கள் ஆகியவை மின்னலால் அதிகம் தாக்கக் கூடிய பகுதியாக இருப்பதால், அதன் அருகில் இருக்கக் கூடாது.
7. மலை உச்சிகள், மைதானங்கள் (வெட்ட வெளிகள்), கடற்கரை மற்றும் தண்ணீரில் உள்ள படகில் இருக்கக் கூடாது.
8. உறுதியான கட்டிடங்களில் இருக்க வேண்டும்.  மைதானத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், சிறிய கட்டிடங்களில் ஆகிய இடங்களில் தங்கக் கூடாது 
9. இரும்பிலான உழவுக் கருவிகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவைகளைத் தொடக் கூடாது.
இடி மற்றும் மின்னல் தாக்கினால் செய்ய வேண்டியவை ; பாதிக்கப்பட்டவருக்கு  இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருந்தால் வேறு ஏதாவது காயம் உள்ளதா என பார்க்கவேண்டும். நரம்பு மண்டலம், எலும்பு முறிவு, கண்பார்வை மற்றும் காது கேட்கும் குறைபாடு உள்ளதா என பார்க்க வேண்டும். பின் உடனடியாக மருத்துவ  சிகிச்சை அளிக்க வேண்டும்.   
இடி மற்றும் மின்னல் நின்றவுடன் செய்யவேண்டியவை 
1. வெள்ளநீரிலான  சாலையில் செல்லாமல் சுற்றிச் செல்ல வேண்டும்.
2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லக் கூடாது. 
3. வானிலை தொடர்பான அறிக்கைகளை தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலம் கேட்க வேண்டும். அதன்படி வெள்ளத்தினால் பாதிக்கப்படாத சாலைகள் மற்றும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
4. மிகவும் உதவி தேவைப்படும்  நபர்கள், கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
5. அறுந்து விழுந்துள்ள மின்கம்பிகளிலிருந்து விலகி நிற்க வேண்டும்.  இது தொடர்பான தகவல்களை அவசர செயலாக்க மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077க்கு தெரிவிக்க வேண்டும். 
6. கால்நடைகளை கண்காணித்து தங்களது நேரடி கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள வேண்டும். 
மேற்படி வழிமுறைகளைப் பின்பற்றி வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
புயல், வெள்ளம் முதலிய இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் அவசர செயலாக்க மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077க்கு தெரிவிக்கலாம். மேலும், 9486454714 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo