Onetamil News Logo

தூத்துக்குடியில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெகுமதி வழங்கி பாராட்டு

Onetamil News
 

தூத்துக்குடியில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெகுமதி வழங்கி பாராட்டு


தூத்துக்குடி 2020 ஜனவரி 22 ;தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய  காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இன்று (22.01.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் முறைப்படி சீராக பராமரிக்கப்பட்டு வருகிறதா எனவு ஆய்வு மேற்கொண்டு அந்த வாகனங்களை ஓட்டும் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின் மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள  கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார். 

பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய  காவல் ஆய்வாளர்கள் புதுக்கோட்டை காவல் நிலையம் முத்துபாண்டி, ஆறுமுகநேரி பத்திரகாளி என்ற பவுண், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ரஞ்சித் குமார், புளியம்பட்டி ஞானராஜ், கோவில்பட்டி மேற்கு அய்யப்பன், காவல் கட்டுப்பாட்டு அறை அன்னபாலா, உதவி ஆய்வாளர்கள் தூத்துக்குடி வடபாகம் சுந்தரம், காவுராஜன், புதுக்கோட்டை முத்துராஜா, ஆறுமுகநேரி சரவணன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் சங்கர், சுந்தர் ராஜ், பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி மேற்கு முத்து விஜயன், கோவில்பட்டி கிழக்கு நாராயணசாமி, விளாத்திகுளம் தேவராஜ், புதூர் சிவப்பிரகாசம், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு முருகன், மாவட்ட குற்றப்பிரிவு செல்லையா, மாவட்ட குற்ற ஆவணக் கூடம் செந்தில் விநாயகம், காவல் கட்டுப்பாட்டு அறை ஆழ்வார், முருகன், மாரிச்செழியன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு சுடலைமுத்து, ஆயுதப்படை  வேல்முருகன், மற்றும் கைவிரல் ரேகை பிரிவு பெண் உதவி ஆய்வாளர்கள் கவிதா, வைஜெயந்தி மாலா, வினோதா,  தலைமை காவலர்கள் தூத்துக்குடி வடபாகம் சுடலைமுத்து, புதுக்கோட்டை அய்யம்பெருமாள், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம்  ஜெயசீலன் பிராங்ளின், கோவில் பிள்ளை, ராமசாமி, சிப்காட் சுரேஷ்குமார், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தாமோதரன், சண்முகம், பொன்ராஜ், கோவில்பட்டி மேற்கு முருகன், ஆனந்த் அமல்ராஜ்,  நாலாட்டின்புதூர் மணிகண்டன், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு முருகன், விளாத்திகுளம்  ஏட்டுராஜ், மாவட்ட குற்றப்பிரிவு வேல்ராஜா, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஜெப சர்குணமணி, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை  பேச்சிமுத்து, காவலர்கள் தூத்துக்குடி வடபாகம் மாணிக்கராஜ், ராஜேஸ்குமார், சேகர், சிவபெருமாள், பாபநாச செல்லத்துரை, வினோத்குமார்,  புதுக்கோட்டை  ஜெயகோபால், சாமிக்கண், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் சுபாஷ் சந்திரபோஷ், சிவா தங்கதுரை, ராமநாதன், ராமர், வேல்பாண்டியன், முருகேஷ் பாபு, திருச்செந்தூர் போக்குவரத்துப் பிரிவு சத்திய சீலன், சுடலைமணி, மணியாச்சி ஜெபசீலன், கோவில்பட்டி மேற்கு ஸ்ரீராம், தாய் மாரி ரோகினி, விளாத்திகுளம் மகேந்திரன், புதூர் முத்து சேகர், முத்துராஜ், மாவட்ட குற்றப்பிரிவு கோதண்டராமன், லதா, மாவட்ட குற்ற ஆவணக் கூடம் சுரேஷ், மெஞ்ஞானபுரம் செந்தில் குமார்   ஆகிய 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன்,  பாராட்டி வெகுமதி வழங்கினார்

இக்கூட்டத்தில் தூத்துக்குடி உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவ அதிகாரி ரமேஷ், உதவி இயக்குனர் அரசு குற்ற வழக்குகள் தொடர்புத்துறை கண்ணன், அரசு உதவி வழக்கறிஞர்கள். முருகப்பெருமாள், ஆனந்தன், அசோக், ஆலன் ராயன், சேது, வசந்த், முருகேசன்,  காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் கலைக் கதிரவன்,  சாத்தான்குளம் பால்துரை, திருச்செந்தூர் பாரத், விளாத்திகுளம் பீர் முஹைதீன், மணியாச்சி ரவிச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பழனிக்குமார், நில மோசடி தடுப்பு பிரிவு பிரதாபன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo