Onetamil News Logo

பேப்பரில் விளம்பரம் வெளியிட வேட்பாளருக்கு முக்கிய அறிவிப்பு  ;  மாவட்டதேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பு 

Onetamil News
 

பேப்பரில் விளம்பரம் வெளியிட வேட்பாளருக்கு முக்கிய அறிவிப்பு  ;  மாவட்டதேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பு 


 தூத்துக்குடி 2019 ஏப்ரல் 15 ; தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில்17.04.2019 மற்றும் 18.04.2019 ஆகிய நாட்களில் அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள்,தனிநபர்கள் அல்லது பிறஅமைப்புகள் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரங்களை வெளியிட வேண்டும் -மாவட்டதேர்தல் அலுவலர்/மாவட்டஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தூத்துக்குடி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கடந்த 10.03.2019 மாலை 5.00மணிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்குழுவானது வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் காட்சி ஊடகம் (எல்.ஈ.டி வாகனம்),செயற்கைகோள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் சான்று பெற்ற பின்னரே விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 
மேலும் இந்தியதேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடைபெறும் நாளின்முந்தைய நாளான 17.04.2019 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 18.04.2019 ஆகிய இரண்டு நாட்களில்அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள், தனிநபர்கள் அல்லது பிறஅமைப்புகள் அச்சு ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரங்களை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்17.04.2019 மற்றும் 18.04.2019 ஆகிய நாட்களில் அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள், தனிநபர்கள் அல்லது பிற அமைப்புகள் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புகுழுவிடம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னர்தான் விளம்பரங்களை வெளியிடவேண்டும். விளம்பரங்களை அனுமதி எண்னுடன் வெளியிடப்பட வேண்டும். 
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் வாக்குப் பதிவு நடைபெறும் நாளும் (18.04.2019),முந்தைய நாளும் (17.04.2019) ஆகிய 2 நாட்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் விளம்பரம் வெளியிடுவதற்கான அச்சு ஊடக அனுமதி சான்று மற்றும் எண் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்த பின்னரே விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
காட்சி ஊடகங்களில் (எல்.ஈ.டி வாகனம்) மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தனிநபர்கள் அல்லது பிற அமைப்புகள் வெளியிடும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் 16.04.2019 அன்று மாலை6.00 மணிக்குமேல் ஒளிபரப்பக்கூடாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு  தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்டஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo