Onetamil News Logo

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் ; நாட்டு நலப்பணித் திட்டம் 1969ல் ஆரம்பித்து 50 ஆண்டுகள் “பொன்விழா”   

Onetamil News
 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் ; நாட்டு நலப்பணித் திட்டம் 1969ல் ஆரம்பித்து 50 ஆண்டுகள் “பொன்விழா”   


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 16 ;நாட்டு நலப் பணித்திட்ட பொன்விழாவினை கொண்டாடும் விதமாக மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அணிகள் 54 மற்றும் 56ன் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் 1969ல் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி “பொன்விழா” தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் காமராஜ் கல்லூரியில் நடைபெற்றன.  இதன் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் து.நாகராஜன் தலைமைவகித்தார்.  அவரது தலைமையுரையில் அழிந்து வரும் தமிழர்களின் கலைகளில் சிலம்பாட்டம் இருந்தாலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும் சிலம்பாட்டம் சிறந்து விளங்குகிறது என்றார்.  அதற்கான காரணங்கள் நமது கலை அனைத்து கோவில் விழாக்களிலும் இன்றும் இடம்பெற்று வருவது ஒரு காரணி என்றார்.  வணிகவியல் துறை தலைவர் முனைவர் கு.காசிராஜன் வாழ்த்துரை வழங்கினார்.  அவரது வாழ்த்துரையில் மாணவியர்களும் சரிநிகராக கலந்து கொண்டுள்ளதையும், அதற்கான சீரிய முயற்சிகளை மேற்கொள்ளும் அதன் பயிற்றுநர்களையே சாரும் எனவும் வாழ்த்தினார்.  “வாத்தியார்” என்பது சிலம்பாட்ட கலைகளை பயிற்றுவிப்பவர்களுக்கே அது பொருத்தமானதாக பல்லாண்டுகளாக தமிழ் திரையுலகில் நிலவி வருவதையும் சுட்டிக்காட்டினார்.  வரவேற்புரையாற்றிய நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி முனைவர் ஆ.தேவராஜ் வரவேற்புரையில் நாட்டு நலப் பணித்திட்டத்தினை தோற்றுவித்த பி.வி.ராவ் அவர்களை நினைவு கூர்ந்தார்.  இப்போட்டிகளை சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ்  துவக்கி வைத்தார்.  அவரது துவக்கவுரையில் இன்றைய விஞ்ஞான உலகில் செல்போன் மற்றும் வீடியோ கேம்ஸ்ல் மூழ்கி இருக்கும் மாணவ, மாணவியர்கள் மத்தியில் இன்று பெருந்திரளாக இப்போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள மாணவ, மாணவியர்களை வாழ்த்தினார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் து.பாலசிங்,சிலம்பாட்ட பயிற்றுனர் கார்த்திக்குடன் இணைந்து நாட்டு நலப் பணித்திட்ட அணி எண்.54 மற்றம் 56 மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.  சுமார் 300க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மருத்துவர் கருணாகரன் மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo