Onetamil News Logo

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  73வது பிறந்தநாள் விழா ;பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட அறிவுரை ; மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

Onetamil News
 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  73வது பிறந்தநாள் விழா ;பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட அறிவுரை ; மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள்


தூத்துக்குடி  2021 பிப்ரவரி 22 ;மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  73வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாளை கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
மறைந்த தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாள் வருகிற 24.02.2021 (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. மேலும், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட கிளை கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் கலந்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி, வட்ட கிளைக் கழகங்களில் நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் மாண்புமிகு அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை கொண்டாடிடும் விதமாக அவர்களின் திருவுருவ படத்தினை அலங்கரித்து கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வருகிற 28 ஆம் தேதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உடன்குடியிலும், , மார்ச் 1 ஆம் தேதி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பூபாலராயர்புரத்திலும், மார்ச் 2 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரலிலும் அம்மா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo