Onetamil News Logo

தூத்துக்குடி அருகே ஒருவருக்கு கொரோனா ;7 பேர் தீவிர கண்காணிப்பு ;வெளிநாடு சென்று வந்த 2137 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி!!

Onetamil News
 

தூத்துக்குடி அருகே ஒருவருக்கு கொரோனா ;7 பேர் தீவிர கண்காணிப்பு ;வெளிநாடு சென்று வந்த 2137 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி!!


தூத்துக்குடி  2020 ஏப்ரல் 1 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ;வெளிநாடு சென்று வந்த 2137 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது....தூத்துக்குடி மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக கயத்தார், காயல்பட்டணம், செய்துங்கநல்லூர்,தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் டெல்லி சென்று வந்த செய்துங்கநல்லூர் பகுதியை சார்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அவரது இருப்பிடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூர சுற்றுப்புற பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பு கொண்டவர்கள், அவர் சென்ற இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.ஒரு ரேசன் கடையில் ஒரு நாளுக்கு 100 நபர்களுக்கு 1000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.மேலும் டெல்லி சென்று வந்த செய்துங்கநல்லூர், காயல்பட்டினம், பேட்மாநகரம், கயத்தார் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 7 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo