Onetamil News Logo

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழா ;அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

Onetamil News
 

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழா ;அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்


தூத்துக்குடி 2018 ஜூலை 11 ; தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் தமிழக அரசின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்  308-வது பிறந்த நாள் விழா - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ , திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
                                             
 தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கட்டாலங்குளத்தில் வீரர் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில், தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 308-வது பிறந்த நாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது.  
                                    
இவ்விழாவில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  கலந்து கொண்டு, சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இவ்விழாவில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும், கலை பண்பாட்டுத்துறையின் மூலம் 15 கலைஞர்களுக்கு சான்றிதழ்களையும்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  வழங்கி, விழாப் பேருரையாற்றினார்கள்.                                                                                                                                                                                                   இந்த விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன்   வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்த விழாவில்..தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் ,
கழக அமைப்பு செயலாளர் சுதா.K. பரமசிவம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை , கழக மகளீர் அணி செயலாளர் விஜிலா சத்யானந் ,முன்னாள் வாரிய தலைவர் இரா.அமிர்தகணேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  P.T.R ராஜகோபால் , மேற்கு பகுதி செயலாளர் A.முருகன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர்  அய்யாத்துரை பாண்டியன் , கோவில்பட்டி நகர செயலாளர்  விஜயபாண்டியன் ,மாவட்ட துணை செயலாளர்  மோகன் .,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக்.மா.ராஜா ,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா , கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன் ,போக்குவரத்து திருநெல்வேலி மண்டல தலைவர் VC வேல் பாண்டியன்.,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சின்னப்பன் ,முன்னாள் துணை மேயர் சேவியர் ,நகர மாணவரணி செயலாளர் சாலமோன் ஜெயசீலன்,மேற்கு பகுதி துணை செயலாளர் கணேசன் ,மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ் , ஊராட்சி கழக செயலாளர்கள் ஜீவா பாண்டியன்,கருங்குளம் சங்கர்,தலைமை கழக பேச்சாளர் K.P.முருகானந்தம் ,வட்ட செயலாளர்கள்.,ஜெய்கணேஷ், நயினார், வட்ட பிரதிநிதிகள் P.மூர்த்தி,முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனபட்டு ,கோவில்பட்டி நிர்வாகிகள்,இனாம் மணியாச்சி ரமேஷ்,பாலமுருகன், நீலகண்டன், ஜெமினி, போடுசாமி, மற்றும் போக்குவரத்து பிரிவு ஜெ.டெரன்ஸ், P.சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo